Wednesday, April 29, 2009

Old Boy [2003] (Korean) - Incest is Sin/Taboo?



IMDB Rating : 8.3/10 :: (Top 250: #118)

2004 Cannes Film Festival -இல் Grand Prix -ஐ வென்ற மற்றும் அப்போது President of the Jury ஆக‌ இருந்த director Quentin Tarantino-ஆல் சிறப்பு பாராட்டும் பெற்ற இக்கொரிய திரைப்படம் ஏற்படுத்திய தாக்கங்களும் அதிர்வுகளும், உச்சம்.

இத்திரைப்படம், நான் பார்த்த முதல் கொரியத் திரைப்படம். இத்திரைப்படத்தின் பின்னணி இசை இன்னும் மனதுக்குள் கிடந்து சுழல்கிறது.

Oh Dae-Su கடத்தப்பட்டு, ஒரு அறைக்குள் சிறைவைக்கப்படுகிறான். ஏன், எதற்கு என்று எதுவும் சொல்லப்படாமலேயே. அறைக்குள் படுக்கை முதல் தொலைக்காட்சி வரை இருக்கிறது. உணவு ஒரு சிறு நுழைவு வழியாக வரும். தூங்க வைக்கவும், சிகை திருத்த உதவியாகவும் அறைக்குள் மயக்கப் புகை செலுத்தப்படும். தொலைக்காட்சி செய்திகளில் தன் மனைவி கொல்லப்பட்டதையும் தன் சிறு வயது மகள் கடத்தப்பட்டதையும் தெரிந்து கொள்கிறான். எதுவும் அவனால் செய்ய முடியாத கையறு நிலை. வெளியே வந்து பழிவாங்க ஏதுவாக அறையின் சுவரில் ஒரு மனித உருவத்தை வரைந்து, அதை தாக்கி, பயிற்சியெல்லாம் எடுத்துக்கொள்கிறான். அறைக்குள் சிறைவாசம்; இப்படியாக பதினைந்து வருடங்கள் கழிகிறது.

திடீரென்று ஒரு நாள் விடுவிக்கப்படுகிறான். முதலில் தன் மகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று நினைக்கிறான். ஒரு ஹோட்டலில் சாப்பிட செல்லும்போது, இளம் பெண்ணொருத்தியை சந்திக்கிறான். மையல் கொள்கிறார்கள். அந்த பெண் தன் வீட்டில் தங்க இடம் கொடுக்கிறாள். தன் எதிரியை சந்திக்க நேர்கிறது. எதிரியை கொல்ல முயற்சிக்கும் போது, "என்னை கொன்றுவிட்டால், உன்னை பதினைந்து வருடம் ஏன் சிறைவைத்திருந்தேன் என்பது உனக்கு தெரியாமலே போய்விடும்" என்கிறான். ஐந்து நாட்கள் கால அவகாசம் தரும் அந்த எதிரி, "ஐந்து நாட்களுக்குள் இதற்கான காரணத்தை கண்டுபிடித்தால் நானே தற்கொலைசெய்து கொள்கிறேன் என்றும், ஒருவேளை உன்னால் அந்த காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், இப்போது புதியாய் உன் வாழ்வில் வந்திருக்கும் அந்த இளம்பெண்ணையும் கொலை செய்வேன்" என்றும் சவால் விடுக்கிறான்.

அந்த எதிரி யார், தன் மகள் என்னவானாள், பதினைந்து வருட சிறைவாசத்தின் பின்புலம், இப்போது உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றிப்போன புதுக்காதலியின் உயிர், ஐந்து நாட்கள். என்ன செய்கிறான் Oh Dae-Su? காரணங்களைக் கண்டுபிடிக்க முயல்கையில் ஒரு பிளாஷ்பேக். இந்த பிளாஷ்பேக்கையும் கதையின் முடிவையும் சொல்லிவிட்டால் படத்தின் சுவாரஸ்யம் ஒன்றுமில்லாமல் போய்விடும். ஆகவே படம் பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்படத்தை யார் பார்க்கலாம் : உலகளாவிய சினிமாக்கள் மீது ஆர்வம் கொண்டவர்களும்; புனிதங்களின் மீதான நம்பிக்கையற்றவர்களும்; மனதைரியம் கொண்டவர்களும் மட்டும் பார்க்கலாம்.

இப்படத்தை யார் பார்க்கவேண்டாம் : உச்சக்கட்ட வன்முறைகளும் ரத்தங்களும் கொண்ட படங்களை பார்க்க விரும்பாதோர், புனிதங்களின் மீதான நம்பிக்கை உடையோர், கலாச்சார காவலர்கள், கொஞ்சம் இயல்பான நெகிழ்வான மனம் கொண்டவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நலம்.

இப்படத்தின் பலம், இப்படத்தின் அத்தனைக் கூறுகளுமே. குறிப்பாகக் கதையும், திரைக்கதையும், படத்தொகுப்பும், பின்னணி இசையும், கூடவே இக்கதையை படமாக்க துணிந்த இயக்குனரின் மன தைரியமும். இப்படத்தின் பின்னணி இசை போல், சமீபத்தில் அத்தனை அற்புதமான, அவ்வளவு பொருத்தமான பின்னணி இசையை எத்திரைப்படத்திலும் காண முடியவில்லை. Oh Dae-Su இருபதுக்கும் மேற்பட்ட நபர்களுடன் சண்டையிடும், சினிமாஸ்கோப் போன்றதொரு காட்சியின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும்.. அற்புதம்.

கீழே கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் சில வரிகளை, இப்படத்தை பார்க்காதவர்களும், பார்க்க வேண்டாதவர்களும் mouse-ஆல் select செய்யாதீர்கள்..

இத்திரைப்படம் ஏற்படுத்தி செல்லும் அதிர்வுகளும், கேள்விகளும் சில புனிதங்களை கேள்விக்குள்ளாக்குகிறது. எதிரி, Oh Dae-Su-ஐ பார்த்து சொல்லும் இந்த டயலாக் : "My sister and I loved each other despite everything. Can you two do the same?" பல கேள்விகளை எழுப்புகிறது. உணர்வுகள் புனிதங்களுக்கு அப்பாற்பட்டவையே.

பிற தகவல் : கொரிய மக்கள் பாம்புகள் முதல் இன்ன பிற உயிரினங்களை, உயிருடனோ அல்லது பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடும் பழக்கமுடையவர்கள். இப்படத்தில் Oh Dae-Su ஒரு உயிருடன் இருக்கும் ஆக்டோபசை சாப்பிடுவதாக ஒரு காட்சி வரும். அந்த காட்சி இயல்பாக எடுக்கப்பட்ட காட்சியே.


IMDB Link

My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
29.04.2009

Thursday, April 16, 2009

Inside Man [2006] - வங்கியை கொள்ளையடித்தல்..


IMDB Rating : 7.7/10

சங்கிலி தொடர் தனியார் வங்கி நடத்தும் ஒரு பெரியமனிதரின், ஒரு முக்கியமான வங்கி கிளை ஒரு நாள் காலையில், Clive Owen - தலைமையிலான கொள்ளையர்களால் கைப்பற்றபடுகிறது.. உள்ளே ஏரளாமான பணமும், லாக்கர்களும் கூடவே வங்கி ஊழியர்களும் வங்கிக்கு வந்தவர்களுமாக கொஞ்சம் பணய கைதிகளாக.. நியூயார்க்கின் போலிஸ் படையும் துப்பறியும் நிபுணர்களும் அந்த வங்கியை சுற்றிவளைக்கின்றனர்.. கொள்ளையர்கள் சில நிபந்தனைகளை முன்வைக்கின்றனர்.. கால அவகாசமும் தருகின்றனர்.. நேரம் கடக்கிறது.. இரவு வந்து பின் அடுத்தநாள் காலையும் விடிகிறது.. திடீரென்று போலிஸ் உள்ளே நுழையும் போது கொள்ளையர்களாக யாரும் இல்லை.. உள்ளே இருப்பதெல்லாம் வங்கி ஊழியர்களும் வங்கிக்கு வந்தவர்களும்.. எந்த பணமும் லாக்கரும் சூறையாடபடவில்லை.. கொள்ளையர்கள் வங்கிக்கு வந்த மனிதர்களோடு ஊடுருவிட்டனர்.. ஆனாலும் கொள்ளை நடந்திருக்கிறது.. கொள்ளையர்களையும் பிடிக்க முடியவில்லை.. எது கொள்ளை போனது?? எப்படி?? இது விறுவிறுப்பான மீதிக்கதை..

******
எனக்கு மிகவும் பிடித்த திரைப்பட தளம் - கொள்ளையடித்தல் (Robbery).. எப்போதுமே புத்திசாலித்தனமான கொள்ளையடிக்கும் தளம் கொண்ட படங்கள் என் மனதை கொள்ளையடிக்கும்.. இந்த திரைப்படமும் நன்றாகவே இருந்தது.. தற்போது Inside Man 2 - தயாராகிக்கொண்டிருக்கிறது..

******
இந்த திரைப்படத்தின் முதலிலும் இறுதியிலும் பெயர்கள் போடப்படும்போது பின்னணியில் ஓடும் பாடல், A.R.ரஹ்மானின் - Dil Se படத்தின் Chaiyya..Chaiyaa பாடல்..


IMDB Link

My Rating : ****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
XX.03.2009

Friday, April 10, 2009

ஆனந்த தாண்டவம் - திரைவிமர்சனம்


சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் நாவலை படமாக்கி இருக்கிறார்கள் என்பது அறிந்ததே.. ஆனால் எப்படி படமாக்கி இருக்கிறார்கள்??

சமீபத்தில் இணையத்தில் பிரிவோம் சந்திப்போம் நாவலின் pdf கோப்பு கிடைத்தது.. திறந்து பார்த்தால், அது நாவலின் இரண்டாம் பாகம்.. இருந்தாலும் படித்து விட்டேன்.. இருந்தாலும் முதல் பாகத்தை ஊக்கிக்க முடிந்தது.. இளமையான கதை அது..

சரி படத்துக்கு வருவோம்.. ரகுவும் மதுமிதாவும் காதலிக்கிறாங்க.. மதுமிதா குடும்பம் கல்யாணம் வரைக்கும் சென்று விட்டு, பின்னர் விலகி, பணக்கார அமெரிக்க ராதா கிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைகிறாங்க.. பின்னர் தற்கொலை முயற்சிக்கு பின், ரகு, அமெரிக்காவுக்கு படிக்க சென்று, பின்னர் அங்கு மதுமிதாவை சந்தித்து, அங்கு வசிக்கும் ரத்னாவை திருமணம் செய்து கொள்ள தீர்மானிக்கப்படும் போது, மதுமிதா வாழ்வில் எற்படும் நிகழ்வுகள், இவர்களின் வாழ்வை என்ன செய்கிறது என்பது கதை..

படத்தின் இடைவேளை காட்சியில், கொஞ்சம் பேர் எழுந்து ஓடி போய் விட்டனர்.. வேலையில்லாத பொறியியல் பட்டதாரி ரகுவுக்கும், அங்கிருக்கும் ஒரு பொறியியல் வல்லுநர் ஒருவரின் மகளான மதுமிதாவுக்குமான காதல் கதை.. முடியலடா சாமி.. ரகுவாகட்டும், மதுமிதாவாகட்டும், மதுமிதாவின் வித்தியாசமான குடிகார குடும்பமாகட்டும், அவங்களோட அசால்ட்டான ஆங்கிலமாகட்டும், எல்லாமே லூசுத்தனமா இருக்கு.. உலகில் இருக்கும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரித்தான். ஆனா கொஞ்சமாயினும் character grip இருக்கனுமே.. அது இல்லை.

மதுமிதா மாதிரியான ["மனசு எங்கே இருக்கு, இங்கேயா.. அம்மா உன்ன காதலிக்க சொன்னாங்க காதலிச்சேன்.. இப்போ ராதா கிருஷ்ணனை கட்டிக்க சொல்றாங்க.. கட்டிக்க போறேன்" என்று சொல்லும் மதுமிதா] லூசு பெண்ணுக்காக நாயகன் அவ்ளோ உருகனுமா.. மேற்கண்ட உரையாடலை கொண்டு மதுமிதா சுயநலவாதி என்று பொருள் கொள்ளாதீர்கள்.. அப்படி சுயநல வாதியாக அக்கதாப்பாதிரத்தை காட்டி இருந்தால் கூட, அதில் ஒரு அழுத்தம் இருந்திருக்கும்.. நல்லா இருந்திருக்கும்.. மதுமிதா கதாப்பாத்திரம் ஒரு லூசு.. உண்மையிலே ராதா கிருஷ்ணன் மற்றும் ரகு அமெரிக்காவில் தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளர் [ரகுவின் அப்பாவின் நண்பர்], கதாப்பாத்திரங்கள் மட்டும் கொஞ்சம் தெளிவான பாத்திரங்கள் எனலாம்..

எப்படியெல்லாம் காதல் வரும் என்பதற்கு, நம்மாளுங்க படங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.. கொடுமைடா சாமி.. இந்த படத்தில் ரகு, மதுமிதா காதலில் ஒரு அழுத்தமே இல்லை.. இனக்கவர்ச்சிதான் போல. இந்த பொண்ணுக்காக இவ்ளோ ஃபீல் ஆகணுமா என்றே தோன்றுகிறது..

ஒளிப்பதிவு அவ்ளோ சரியில்லை, ஓகே என்றே சொல்வேன்.. ஆனால் கதை நகரும் இடங்கள் அழகானவை. தென்காசிக்கு அருகில் இருக்கும் மலை தொடர்கள், நதி மற்றும் அமேரிக்கா என அழகான இடங்களை, இன்னும் வெகு அழகாக காட்டி இருக்கலாம்..

இசையும் அப்படியே.. இரண்டு பாடல்கள் அழகு.. G.V.பிரகாஷ் இன்னும் நல்லா பண்ண முயற்சியுங்க..

நாவலை படமாக்குவது மிகக்கடினம். நிறைய பக்கங்களில் இருப்பதை, இரண்டு மணி நேர படத்தில் [நான்கைந்து பாடல்களுடன்] சொல்லும் போது, சில காட்சிகளை ஒதுக்க வேண்டி வரும். இரண்டாம் பாதியை நான் படித்திருந்தால், என்னால் இதை மட்டும் சொல்ல முடியும். நாவல் படியே முடிந்தவரை படமாக்கி இருக்கிறார், காந்தி கிருஷ்ணா.. ஆனாலும் காந்தி கிருஷ்ணா, படம் இயக்குவதில் உங்களுக்கு இன்னும் பயிற்சி வேண்டுமோ? [செல்லமே ஓரளவுக்கு ஒகேவா இருந்ததே].. இப்படத்தில் pace,grip-ம் இல்லை.. படத்தில் இடைவேளைக்கு பின்பும் கொஞ்ச நேரத்தில் இன்னும் சிலர் எஸ்கேப்.. படம் முடியும் போது, மதுமிதா மனதில் நிற்கவில்லை.. ஆனால் மதுமிதா கதாப்பாத்திரத்துக்கு தமன்னா சரி. ஆனால் மற்றவர்கள் பொருத்தமில்லை.. வேறு சிலரை நடிக்க வைத்திருக்கலாம்.. அதுவே முதல் குறையாகிவிட்டது.. இது எல்லாத்திலேயும் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், நாயகனுக்கு டப்பிங் கொடுத்திருப்பது ரவிகிருஷ்ணா [ம்ம்.. அனிதா..].. இந்தக்கதைக்கு அவரின் நாயகன் குரல் எடுபடல.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, நாவலை படமாக்கும் முயற்சிகள் அரிது எனலாம்.. இந்த படம் வெற்றி பெரும் பட்சத்தில், இன்னும் சிலர் நாவல்களை படமாக்க முயற்சிப்பார்.. ஆனால் இந்த படத்தின் வெற்றி மிகப் பெரிய கேள்விக்குறி.

முதல் பாதி - ஆளை விடுங்கடா சாமி..
இரண்டாம் பாதி - just ஓகே..

சுஜாதாவின் ரசிகர்களுக்கு : இந்த நாவலை படித்தவர்கள் - இந்த படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வந்து, உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.. இந்த படத்தை பார்க்கிறது கொடுமைதான், இருந்தாலும் இப்படத்தை பார்த்தல் சுஜாதாவுக்கு அஞ்சலியாகவும் இருக்கட்டுமே.. ஏனென்றால் நான் நிறைய சுஜாதாவின் எழுத்துக்களை வாசித்து இருந்திராத போதும். நிறைய சுஜாதாவின் ரசிகர்களை பார்த்திருக்கிறேன்..

என்னை மாதிரியான ஆளுங்களுக்கு : தமன்னாவை சைட் அடிக்கலாம்.. லூசுத்தனமா இருக்கும்போதிலும்.. ஆனாலும் கடுப்பாதாங்க இருக்கும்.. அதுக்கு மேலே உங்க இஷ்டம்..


மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
10.04.2009

Thursday, April 9, 2009

Groundhog Day [1993] - வாராமல் போன நாளை !!


IMDB RATING : 8.1/10 : Top 250: #173
டிஸ்கி : இந்த பதிவில் வரும் 'நீங்கள்', 'உங்கள்' வெறும் குறிப்பான் மட்டுமே. குத்திக்காட்ட அல்ல..


] உங்களுடைய நேற்றைய நாளுக்கும், இன்றைய நாளுக்கும், நாளை வரப்போகும் நாளுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?
[ உங்களுடைய திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாளில் [வேலை நாட்கள்] ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?
] நேற்றை விட, இன்று ஏதாவது குறைந்தபட்சம் வித்தியாசமாய் செய்தீர்களா?
[ நேற்றை விட இன்றோ அல்லது இன்றை விட நாளையோ, நீங்கள் வாழ்க்கைக்குள் ஏதாவது கண்டுபிடிக்க முயலும் எண்ணம் இருக்கிறதா?

இன்னும் இந்த கேள்விகளை சுருங்க கேட்டால், ஒவ்வொரு நாளும் நீங்கள் வாழ்கிறீர்களா அல்லது இயந்திரம் போல் செய்ததையே செய்கிறீர்களா?
இந்த கேள்விக்கு உங்கள் பதில் ஆம் என்றால், உங்களுக்கு நாளை எதற்கு?

பயமா இருக்கா?
***************

ஒவ்வொரு ஆண்டும், feb 2-ம் தேதி அமெரிக்க மற்றும் கனடா நாடுகளில், கொண்டாடப்படும் பருவம் சார்ந்த ஒரு நாள், groundhog day. இன்னும் எத்தனை வாரங்கள் பனி நீடிக்கும் என்பதை மரபு வழியில் சொல்லும் ஒரு நாள்.
***************

இப்படத்தின் நாயகன் ஒரு செய்தி தொலைக்காட்சியில் வானிலை முன்னறிவிப்பாளர். இந்த ஆண்டும் வழக்கம் போல் groundhog day செய்தி சேகரிப்புக்காக Punxsutawney, Pennsylvania, செல்கிறான், தன் குழுவோடு. groundhog day கொண்டாட்டங்களின் செய்தி சேகரிப்பு முடிந்ததும், தன் சொந்த ஊர் திரும்ப நினைக்கிறான். முடியாமல் போகிறது. இரவில் அங்கு தங்குகிறான். விடிகிறது. ஊர் முழுக்க groundhog day கொண்டாட்டங்கள். நேற்றுதானே groundhog day கொண்டாட்டங்கள் முடிந்தது. மீண்டும் அதே groundhog day. இரவில் தங்குகிறான்.
விடிகிறது. groundhog day கொண்டாட்டங்கள்.. இரவு முடிகிறது..
விடிகிறது. groundhog day கொண்டாட்டங்கள்.. இரவு முடிகிறது..
விடிகிறது. groundhog day கொண்டாட்டங்கள்.. இரவு முடிகிறது..
அதே Feb 2nd மீண்டும் மீண்டும்..

***************

இப்படியாக, இன்றைய தினமே உங்களுக்கு நாளையுமாக விடிகிறது. என்ன செய்வீர்கள்?

முதலில் பயப்பட துவங்குகிறீர்கள். இதை பற்றி உங்கள் நண்பர்களிடம் சொல்கிறீர்கள். அவர்கள் நம்ப மறுக்கிறார்கள் [அவர்களுக்கும் அதே நாள், ஆனால் அவர்களுக்கு அது தெரியாது].. நல்ல மருத்துவரை அணுகி உங்களை பரிசோதித்து கொள்கிறீர்கள்.. ஓரிரு நாட்களில் அந்த நாள் உங்களுக்கு பழகி போய்விடுகிறது.. நீங்கள் என்ன செய்தாலும், விடியும் காலையில், நீங்கள் உங்கள் வீட்டு படுக்கையறையில். நீங்கள் இன்று தற்கொலையே செய்துகொண்டாலும் கூட.

உங்களுக்கு இதனால் கிடைக்கும் சலுகை என்ன?
நீங்கள் ஒரு தலையாய் காதலிக்கும் காதலியை, அவள் மனதை கவர்ந்து காதலிக்க வைக்கலாம்.. அல்லது நீங்கள் திருடலாம்.. கொள்ளையடிக்கலாம்.. பெண்களை கவரலாம்.. அன்றே உங்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும், நீங்கள் மீண்டும் உங்கள் படுக்கையறையில் அடுத்தநாள் காலையில்.

உங்களுக்கு இதனால் கிடைக்கும் அவதி என்ன?
இன்று லாவகமாக நீங்கள் திருடுகிறீர்கள், நாளை அது பழகி போன பின், நீங்கள் எதை செய்தாலும், என்ன த்ரில் இருக்கும்?
*************

இப்போது நீங்கள் மரணமில்லாத கடவுள் ஆகுறீர்கள்..
என்ன பயன்..??
*************

உங்கள் சுயநலங்களை தவிர்த்து, உங்களுக்குள் தேடிப்பாருங்கள்.. ஒரு உயிரொன்று அன்புக்காக ஏங்கியும், அன்பை வழங்க விருப்பாமாயும் இருக்கும்.. உங்களை சுற்றி இருப்பவர்களும் அவ்வாறே.. நீங்கள், உங்களை சுற்றி இருப்பவர்களை மகிழ்வித்து, உண்மையாய் நேசித்து, அன்போடு வாழத்துவங்குகிறீர்கள்..
அடுத்த நாள் விடிகிறது..
*************

இந்தக்கதையை பொறுத்தவரை, "ஒரே நாள் திரும்ப திரும்ப" என்பதை, மறுபிறவிகளையும் மற்றும் பிறவியற்ற வீடுபேறு விழைவையும் குறிப்பதாகவும் கொள்ளலாம்..


IMDB Link

My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
09.03.2009

Saturday, April 4, 2009

அயன் - திரைவிமர்சனம்


Robbery, Smugling - வேகமும் விவேகமும் இருக்கும் அல்லது இருந்தால் மட்டுமே வெற்றி பெற கூட கதைத்தளங்கள்.. இந்த தளத்தில் தமிழ் சினிமாவில் வந்த திரைப்படங்கள் குறைவு.. இந்த தளத்தை கொண்டு வந்திருக்கும் படம்தான் அயன்.. ஆனால் அயன் எவ்வளவு வேகமாகவும் விவேகமாகவும் இருக்கிறது?? பார்ப்போம்..

*******

படத்தின் கதைக்கருவை எங்கிருந்து பிடித்திருப்பார் கே.வி.ஆனந்த்.. நம் தமிழ்நாட்டின் சமீப நிகழ்வுகளும், தினத்தந்தியும் தான்.. வயிற்றில் ஆப்ரேஷன் மூலமாகவோ அல்லது கேப்சூலாக முழுங்கியோ அப்பாவிகளை அல்லது அல்லக்கைகளை வைத்து "பொருள்களை" கடத்தும் முறைதான் கதைக்கரு.. படத்தின் இடைவேளைக்கு பின்பு வரும் முதல் இந்த எபிசொட் படத்தின் பலம்.. இந்த கதைக்கருவிற்கு முன்பும் பின்பும் காட்சிகள் வேண்டுமே.. என்ன பண்ணலாம்..


நம்மூர் "பஜாரில்" கிடைக்காத "பொருள்களே" இல்லை.. அதை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் பிரபு தலைமைக்கும், ஒரு வட இந்தியாவை சேர்ந்த தலைமைக்கும் தொழில் முறை போட்டி.. பிரபுவின் ஆளான சூர்யா, இதற்கு முன் வந்த படக்கதாபாத்திரங்கள் [காக்க காக்க, பேரழகன் முதல் வாரணம் ஆயிரம் அப்பா வரை] கெட்டப் மூலம் மற்றும் அசால்ட்டாக "பொருள்களை" கடத்துகிறார்.. [கடத்தல்காரவுங்க எல்லாம் பாருங்கப்பா. என்னா ஈஸியா பண்றாங்க இந்த படத்திலே..]

வழக்கம் போல் Catch me if you can வகையறா முதல் kevin metnick வரை நாயகனுக்கு என்ன ஆகுமோ, அதுவே முடிவு..

படம் முழுக்க வழக்கம் போல காட்சிகள். ஓபனிங் சாங், நண்பன் தங்கை காதலியாவது, நண்பன் மற்றும் பிரபு கொல்லப்படுதல், பிறகு பழிவாங்குதல், நாயகனின் அண்ணன் செத்து போன பிந்தைய காட்சிகளில் டுயட் பாடுவது என்று தமிழ் சினிமாவின் அத்தனை வழக்கம் போலக்களும் உண்டு..

ஆனால் படத்தை ஸ்டைலா எடுக்கனுமே.. என்ன பண்ணலாம்.. வெளிநாடு போலாம்.. குறிப்பாக மலேசியா போகணும், கூடவே ஆப்பிரிக்க போனா இன்னும் வித்தியாசமான படமா காட்டலாம்.. இதெல்லாம் படத்தில் உண்டு..

நாயகி - தமன்னா.. அழகு பொம்மை.. அப்படியே வந்து போகிறார் "வழக்கம் போல".. அவரை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டி இருக்கலாம்.. சூர்யா நல்லா நடித்திருக்கிறார் "வழக்கம் போல".. கஷ்டப்பட்டு மெட்ராஸ் பாஷை பேச ட்ரை பண்ணி இருக்காரு.. படத்தில் இவருக்கும் நாயகிக்கும் காதல் வருவதும் "வழக்கம் போல".. உச்சக்கட்ட ஆபாசம்.. [மொபைல் கொடுத்தாகூட காதல் வருதுப்பா [ஒழுங்காதானடா இருந்தீங்க.. திடீர்னு எங்க இருந்து வருது இந்த லவ்வு..]]

படத்தின் ஒளிப்பதிவு நல்லா இருக்கு.. ஆனால் அட்டகாசம் செய்யவில்லை..

படத்தின் இசை.. ஹாரிஸ் சார், பாட்டு ஒகேதான்.. படத்தின் இறுதி சண்டைக்காட்சியின் பின்னணி இசையில் எல்லாரும் சிரிக்கிறார்கள்.. பின்னணி இசை சேர்ப்பில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்க..

படம் நிச்சயம் வெற்றி பெறும்.. என்னை பொறுத்தவரை கே.வி.ஆனந்துக்கு, தமிழ் சினிமாவின் வெற்றி படம் எடுக்கும் எல்லா தகுதியும் இருப்பதை நிரூபித்து இருக்கிறார்.. ஆனால் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முயற்சி எடுக்கலாம்..

"கனா கண்டேன்" நன்றாக இருந்ததாக நண்பன் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன்.. ஆனால் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை என்பதால் கே.வி.ஆனந்த் இப்படியாகிவிட்டார் போலும்..

இந்த படம் சூர்யா, தமன்னா முதல் ஆனந்த் வரை யாருக்கும் பெஸ்டாக இருக்க போவதில்லை.. வெறும் வெற்றிப்படம் மட்டுமே..

முதல் பாதி - சுமாருக்கு கீழே.. இரண்டாம் பாதி - சுமாருக்கு 1mm மேலே..

*******

டிஸ்கி 1 : படத்தின் பெயருக்கும், படத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி தடை செய்யப்படுகிறது.. [இருந்திருந்தாதான் சொல்லி இருப்போமில்லை..]

டிஸ்கி 2 : அயன், தமிழ் வார்த்தையா??

டிஸ்கி 3 : ஒரு காட்சியில் தமிழ் திரைப்பட இயக்குனர்களை பகடி செய்து இருக்கும் கே.வி.ஆனந்த், அதை சொ.செ.சூ என்பாரா??


மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
04.04.2009

Thursday, April 2, 2009

Léon [1994] - கொலை செய்யக் கற்றுத்தருதல்..


IMDB Rating : 8.6/10 : Top 250: #34

Léon (Jean Reno)- ஒரு Professional Killer.. ஒரு அப்பார்ட்மென்டில் தனியே வசிக்கும் மனிதர்.. அவரின் சொத்துக்களெல்லாம், துப்பாக்கி முதலான ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு கைப்பெட்டியும், ஒரு தொட்டிச் செடியும்..

அவரின் பக்கத்துவீட்டில் இருக்கும் ஒருவரின் (போதை பொருள் இடை மனிதர்) குடும்பம் (அவரின் மனைவி, மூன்று குழந்தைகள்) வசிக்கிறது.. அவரின் பன்னிரண்டு வயது பெண் Mathilda (Natalie Portman)..

போதைப்பொருள் தலைவனை (வில்லன்) ஏமாற்ற முயன்றதற்காக, அந்த பக்கத்துக்கு வீடு குடும்ப தலைவனையும், அவன் குடும்பத்தையும் கொன்று குவிக்கிறான் வில்லன்.. அந்நேரம் வெளியே கடைக்கு சென்ற Mathilda திரும்பி வரும்போது, சம்பவங்களை புரிந்து பக்கத்து வீட்டின் கதவைத்தட்டி Leon இடம் சரணடைகிறாள்.. Leon வீட்டில் சிறு சிறு வேலைகள் (சமைத்தல், துணி துவைத்தல்) செய்து, பதிலாக தனக்கு கொலை செய்தலை கற்று தரவேண்டுமென்றும், தன் குடும்பத்தை கொன்றவர்களை பழிவாங்கவேண்டுமென்றும் கேட்கிறாள் Mathilda.. முதலில் மறுத்து, பின்பு தன் கொலைத்தொழில் கற்றுத் தருகிறான் Leon.. ஒரு கட்டத்தில் இந்த பன்னிரண்டு வயது பெண், Leon-ஐ காதலிப்பதாகவும் சொல்கிறாள்.. கதை இப்போது Leon, Mathilda, வில்லன் என்று பயணித்து, இவர்களின் வாழ்க்கை என்னவாகிறது என்பது மீதிக்கதை..

******
படம் உணர்வுகளால் கட்டப்பட்ட, விறுவிறுப்பான, கூடவே மெதுவாக நகர்ந்து செல்லும் ஒரு படம்.. Leon-ஆக Jean Reno-வும், பன்னிரண்டு வயது Mathilda-ஆக Natalie Portman-வும் நடிப்பில் கலக்கி இருக்கிறார்கள்.. வில்லன் உடல்மொழி மூலம் மிரட்டி இருக்கிறார்..

ஒரு மிக அருமையான திரைப்படத்திற்கு Léon உதாரணம்..



IMDB Link

My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
XX.03.2009

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..