Tuesday, March 31, 2009

The Italian Job [2003] - தங்கக்கட்டிகளை கொள்ளையடித்தல்


IMDB Rating : 6.9/10

சில நண்பர்கள் (Mark Wahlberg, Jason Statham மற்றும் சிலர்), ஒரு வயதான, அனுபவசாலியான ஒருவரின் துணையோடு ஒரு குடும்பம் போல், கொள்ளையடிப்பது இவர்கள் வாழ்க்கை.

இப்படியாக வெனிசில் 32 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை திருடுகையில், அக்கூட்டத்தில் இருக்கும் ஒரு கருப்பு ஆடு, தன் ஆட்களோடு துப்பாக்கி முனையில் அபகரித்து கொள்கிறான்.. இவர்கள் தந்தைபோல் மதிக்கும் அந்த வயதானவரையும் கொன்று விடுகிறான்.. மற்றவர்கள் தப்பித்து விடுகிறார்கள்.. பின்னர் இவர்கள் அனைவரும், இறந்தவரின் மகளோடு (நாயகி), வில்லனை தேடி, தன் தந்தை போலானவரின் இறப்புக்கு பழிவாங்குதலும், தங்கக்கட்டிகளை மீட்டெடுப்பதும் இப்படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை..

******
புத்திசாலித்தனமாகக் கொள்ளையடித்தல் (லாஜிக் மீறுதல் இருக்கும் போதிலும்), புதுப்புது தொழில்நுட்பம், சேஸிங், சிறப்பான ஒளிப்பதிவு, பின்னணி இசை, இயக்கம் - வேறென்ன வேண்டும் ஒரு Robbery plot திரைப்படத்திற்கு..

The Italian Job - Just Enjoy the Ride..


IMDB Link

My Rating : ***
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
31.03.2009

Thursday, March 26, 2009

Run Lola Run [1998] - "What if..."


IMDB Rating : 8.0/10

Lola Rent (Run Lola Run) - இத்திரைப்படம் ஒரு ஜெர்மானிய திரைப்படம். "Perfume: The Story of a Murderer" புகழ், ஜெர்மன் இயக்குனர் Tom Tykwer-ன் ஆரம்பகால புகழ் பெற்ற திரைப்படமிது..

******
தன் தலைவனுக்கு எடுத்து செல்லும் பணத்தை (100,000 Deutschmarks) ரயிலில் தொலைத்துவிடும் காதலன், தன் காதலிக்கு(Lola) பொதுதொலைபேசியில் இருந்து தொலைபேசுகிறான் மரண பயத்தில்.. இன்னும் இருபது நிமிடத்தில், தன் தலைவனிடம் கொடுக்க வேண்டிய பணத்திற்காக, தன் எதிரே இருக்கும் ஒரு சூப்பர் மார்கட்டை திருடப்போவதாகவும் சொல்கிறான்.. அது வேண்டாமென்றும், இன்னும் இருபது நிமிடத்தில் அப்பணத்தோடு அவனை சந்திப்பதாக சொல்கிறாள் காதலி.. தனது மோட்டார் சைக்கிளை சமீபத்தில் தொலைத்திருந்த காதலிக்கு, இன்னும் இருபது நிமிடத்தில் பணத்தையும் திரட்டிவிட்டு, தன் காதலனை சந்திக்கவும், ஓடியாக வேண்டும்..

நிகழ்வு ஒன்று : சில நிகழ்வுகளால் சில நொடிகள் தாமதம்
ஓட துவங்குகிறாள்.. பெரிய வங்கியின், பெரிய பதவியில் இருக்கும் தந்தையை சந்திக்கிறாள்.. பணம் கேட்கிறாள்.. இங்கு ஒரு நிகழ்வு*.. காதலனை சந்திக்க ஓடுகிறாள்.. தவறுதல்..

நிகழ்வு இரண்டு : சில நிகழ்வுகளால் சில நொடிகள் முன்பாகவே
ஓட துவங்குகிறாள்.. பெரிய வங்கியின், பெரிய பதவியில் இருக்கும் தந்தையை சந்திக்கிறாள்.. பணம் கேட்கிறாள்.. இங்கு ஒரு நிகழ்வு*.. காதலனை சந்திக்க ஓடுகிறாள்.. தவறுதல்..

நிகழ்வு மூன்று : சில நிகழ்வுகளால் சரியான நேரத்தில்
ஓட துவங்குகிறாள்.. பெரிய வங்கியின், பெரிய பதவியில் இருக்கும் தந்தையை சந்திக்கிறாள்.. பணம் கேட்கிறாள்.. இங்கு ஒரு நிகழ்வு*.. காதலனை சந்திக்க ஓடுகிறாள்.. என்ன ஆகிறது??

******
ஒரு வேளை இப்படி நடந்தால், விதி என்னாகும் என்பதை திரையில் காட்டுகிறார் இயக்குனர்.. சில காட்சிகள் 2D Dimension Cartoon episode ஆக நிகழ்கிறது..
நாயகி ஓடும்போது இடிக்கப்படும் மனிதர்களின் சமீபத்ய வாழ்வின் நிகழ்வு snapshot-களாகவும் காட்டப்படுகிறது.. கதைக்குள் இன்னொரு குட்டி கதையாக..

Lola Rent (Run Lola Run) ஒரு மிக வித்தியாசமான திரை அனுபவத்திற்கு..

இங்கு ஒரு நிகழ்வு*.. - திரையில் காண்க..

IMDB Link

My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
26.03.2009

Monday, March 23, 2009

Sin City [2005] - பாவ நகரம்..


IMDB Rating 8.4/10 : Top 250: #92

ஒரு திரைப்படம் முடியும் நேரம், இன்னும் சில மணி நேரங்கள் இத்திரைப்படம் ஓடினால் நன்றாக இருக்குமே என்று தோன்றிய திரைப்படம் Sin City.. இப்போது எழுதி கொண்டிருக்கும் போது கூட, மீண்டும் பார்க்க தூண்டுகிறது.. அதே நேரத்தில் இந்த திரைப்படம் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமும் உள்ளது.. குறிப்பாக பெண்களுக்கு.. படம் முழுக்க வன்முறை மட்டுமே.. ஆனால் கவித்துமான வன்முறை.. ;)

*****
எல்லாருக்குமே படக்கதைகள் மீதான அலாதியான ஆர்வம் உண்டு.. இந்நாள்வரை நிறைய படக்கதைகளை படமாக எடுத்திருக்கிறார்கள்.. ஆனால் அவையெல்லாம் திரைப்படங்களாக மட்டுமே இருந்திருக்கிறது.. படக்கதைகளை படக்கதைகளாகவே திரைப்படத்தில் கொண்டுவந்தால்எப்படி இருக்கும்?? திரைப்படம் என்பது படக்கதை நகரும் ஊடகமாக மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்?? அதுதான் Sin City.

முழுக்க முழுக்க கருப்பு வெள்ளை காட்சிகளில் சில பகுதிகள் மட்டும் நிறங்கள் இருக்கும் (சில நேரம் பெண்ணின் உதட்டின் லிப்ஸ்டிக், சில நேரம் ரத்த துளிகள், காரின் நிறம், விளக்குகள், மழை பெய்யும் விதம், இப்படியாக).. காரை ஓட்டும் வேகம்.. ஆக்சன் காட்சிகள்.. படத்தை எடுத்த விதம், நகர்த்திய விதம், கதையாடல்.. என அப்படியே ஒரு படக்கதை புத்தகம் Sin City..

*****
Frank Miller-ன் Sin City படக்கதைகளை அவரே இயக்கி தந்திருக்கும் திரைப்படம்தான் SinCity.. படத்தின் special guest director-ஆக "Pulp Fiction" Quentin Tarantino.

படம் மூன்று கதையினூடே பயணிக்கிறது..
1. The Hard Goodbye - ஒரு முறை காதலிக்காக பழிவாங்கும் பெரிய உருவமுடைய ஒருவன் (Jason Douglas)..
2. The Big Fat Kill - அதிகாரத்தோடு (Benicio Del Toro) மோதும் பாலியல் தொழில் செய்யும் பெண்களின் ஒரு வாழ்க்கை போராட்டம்.. (Clive Owen)
3. That Yellow Bastard - ஒரு வயதான Police Officer (Bruce Wills) ஒரு தொடர் கொலைகாரனிடமிருந்து ஒரு சிறுபெண்ணை (Jesicca Alba)பாதுகாத்தல்..

*****
Sin City - ஒரு மிக வித்தியாசமான திரைப்படம் காண வேண்டுமானால் உடனே பாருங்க..


IMDB Link

My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
23.03.2009

Monday, March 16, 2009

12 Angry Men [1957] - சமூகத்தின் பொதுபுத்தி..


IMDB Rating - 8.9/10 - Top 250: #9

நீதிமன்ற காட்சி. நீதிபதி இதுவரை நடந்த வழக்கின் (பதினெட்டு வயது சேரி இளைஞன் தன் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறான்) முடிவை இதுவரை கவனித்துவந்த பன்னிரு ஜூரிக்களிடம் ஒப்படைக்கிறார். பன்னிரு ஜூரிக்களும் விவாதித்து முடிவை சொல்லவேண்டும்.. (இந்த பன்னிரு ஜூரிக்களும் சமூகத்தின், பொதுபுத்தியின் பல்வேறு அடுக்களை சார்ந்த மனிதர்கள்..) ஒரு அறைக்கு சென்று விவாதிக்க தொடங்கும் முன்பான வாக்கெடுப்பில் பதினோரு பேர் அந்த இளைஞன் குற்றவாளி என்று வாக்களிக்கின்றனர். விவாதமே நேர விரயம் என்கின்றனர்.. இதுவரை நடந்த வழக்கில் அரசு தரப்பு வாதமும், சாட்சியங்களும் அத்தனை துல்லியமாக இளைஞனை குற்றவாளி என்று உறுதிபடுத்தியதால்.. ஒருவர் மட்டும் விவாதிக்காமல் முடிவு சொல்லமாட்டேன் என்றும், இளைஞனின் உயிரோடு விளையாடக்கூடதென்றும் கேட்டு கொள்கிறார்.. அந்த இளைஞன் குற்றவாளியாய் இல்லாமலிருப்பதற்க்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதுகிறார்..

இவர்கள் பன்னிருவரும் அந்த அறையில் விவாதிப்பதே இந்த முழுத்திரைப்படமும்.. படத்தின் முதல் காட்சியில் வரும் ஒரு நீதிமன்றக்காட்சியும், இறுதியில் அந்த பன்னிருவரும் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே வரும் காட்சியும் தவிர்த்து, இந்த முழுத்திரைப்படமும் அந்த அறைக்குள் மட்டுமே.. பேச்சும் மறுபேச்சும் மட்டுமே..

--OOO--
உலகளாவிய மேலாண்மை பல்கலைகழகங்களிலும் கல்லூரிகளிலும் இன்றைக்கும் திரையிடப்படும் கருப்பு வெள்ளை திரைப்படமிது.. சமூகத்தின் வேறுப்பட்ட மனிதர்களையும், சிறு சிறு செயல்களையும் தன் சொந்த வெற்றிகளாக முன்னிறுத்தும் மனிதர்களையும், சமூகத்தின் பொதுபுத்தியிலிருந்து கொஞ்சமும் பிழறாத வேறு சிந்திக்க தெரியாத மனிதர்களையும், சமூகத்தின் பல்வேறு அடுக்கு மனிதர்களையும், பருவ நிலைகள் கூட சிந்திக்கும் போக்கை மாற்றும் என்பதையும் இப்படத்தில் காணலாம்..
அல்லது பருவ நிலைகளை குறியீடாகவும் கருதலாம்.. படத்தில் குறியீட்டு தன்மையும் பகடிகளும் உண்டு.. கவனித்துப் பார்க்கவும்.. கண்களுக்கும் காதுகளுக்கும் ஒரு நல்ல விருந்து.

Related Posts : ஒரே அறையில் எடுக்கப்பட்ட முழுத் திரைப்படம் (12 ANGRY MEN)


IMDB Link

My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
16.03.2009

Wednesday, March 11, 2009

One Flew Over the Cuckoo's Nest [1975] -யார் மனநோயாளி?


IMDB Rating : 8.9/10 (Top 250: #8)
"யார் பிரகாரம் ஒருத்தன் மன நோயாளிங்கிறது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினை"

"மன நோயாளி,பைத்தியக்காரன் என சக மனிதனை அழைப்பது மிகப்பெரிய வன்முறை.மேலும் அவ்வாறழைக்க யாருக்கும் உரிமையும் இல்லை"

"அவ்வார்த்தைகள் புரிதல் நிமித்தமாக இங்கு கையாண்டதற்கு மன்னிக்க"
- கோபி கிருஷ்ணன்


1. நீங்கள் மிக சிறந்த உலக திரைப்படங்களை தேடி பிடித்தாவது பார்க்கும் பழக்கம் உடையவரா?? [சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என ஒரு திரைபடத்தின் முக்கியமான ஐந்து துறைகளில் ஆஸ்கார் விருதுகளையும் இன்னும் பல விருதுகளையும் வாங்கிய திரைப்படம்]
2. சக மனிதனை நேசிப்பதுண்டா??
3. Body Language குறித்தும், மனிதர்களிடம் பேசுவது மற்றும் கையாளுவது குறித்தும் விருப்பம் இருக்கிறதா??
4. 99% காட்சிகள் ஒரு மனநல காப்பகத்தில் நகரும் திரைப்படத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்??

--OO--
One Flew Over the Cuckoo's Nest [1975] (Based on the novel One Flew Over the Cuckoo's Nest by Ken Kesay

ஒரு அழகான இசையுடன், ஒரு மன நல காப்பகத்தின் காலைபொழுது துவங்குகிறது. பதினேழு மன நோயாளிகள் இருக்கும் அம்மனநல காப்பகத்தை ஒரு Cheif Nurse மிகவும் கண்டிப்புடன் விதிகளுக்குட்பட்டு [விதிகள் அவர்கள் நினைத்தால் மாற்றி அமைக்கக்கூடியது] கண்காணித்து வருகிறார். உடற்பயிற்சி, மருந்து, குழு விவாதம், விளையாட்டு, டிவி, தூக்கம் போன்ற ஒரு நாளைய நடவடிக்கைகள் கண்முன்னே விரிகிறது.. இந்த பதினேழு மன நலம் குன்றியவர்களுள், மன நிலை சிறிது தவறியவர்கள் முதல் பெரிதும் தவறியவர்கள் வரை, வெகு சிலர் தானே முன்வந்து சேர்ந்தவர்கள் [Voluntary Boarders].

நாயகன், மெக்மெர்ஃபி [Jack Nicholson], கிரிமினல் குற்றத்திற்காக சிறையில் அடைக்கபட்டிருந்து பின் அட்டகாசம் தாங்கமுடியாமல் அந்த மன நல காப்பகத்தில் கண்காணிப்பிற்காக அனுப்பப்படுகிறான்.. மெக்மெர்ஃபி ஒரு கலாட்டாவான, துருதுருவென்ற ஒருவன்..

மெக்மெர்ஃபி, எல்லாரிடமும் ஒரு வித்தியாசமின்றி நடந்து கொள்கிறான். பழகுகிறான்.. ஒரு நாள் எப்படியோ அவர்களை வெளியே கூட்டி சென்று படகில் ஒரு நாளை கழிக்க வைக்கிறான்.. மீன் பிடிக்க கற்று தருகிறான்..கண்டிப்பான நர்ஸ். கட்டுப்படாத நாயகன். இவர்கள் மன நிலை தவறியர்களுடன் எப்படி பழகுகிறார்கள், எப்படி நடத்துகிறார்கள்.. கடைசியில் இவர்களின் வாழ்க்கை என்னவாகிறது.. Atlast, One (Bird) Flew Over the Cuckoo's Nest.. படம் முடிகையில் மனசு கனத்து போகும் என்பதில் சந்தேகமில்லை.. மிக அற்புதமான டிராமா.. Jack Nicholson, Cheif Nurse பெண்மணி மற்றும் அனைவருக்கும் HATS OFF..

இதற்கு மேல் படத்தின் கதையை விலாவாரியாக சொல்ல விரும்பவில்லை.. பார்த்து கொள்ளுங்கள்.


Wiki Link and IMDB Link

My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
11.03.2009

தொடர்புடைய புத்தகம் : உள்ளேயிருந்து சில குரல்கள் - கோபி கிருஷ்ணன்

Sunday, March 8, 2009

யாவரும் நலம் - திரைவிமர்சனம்


தமிழில் த்ரில்லர் படங்கள் வராதா என்றும் அப்படியே வருடத்திற்கு ஒன்றிரண்டு த்ரில்லர்கள் வந்தாலும் அவை நல்ல த்ரில்லர்களாக இருக்காதா (மொக்கையா இல்லாம) என்றும் யோசித்து கிடந்த வேளையில், வந்திருக்கும் படம்தான் யாவரும் நலம்..

--OOO--
நீங்கள் ஒரு புது ஃப்ளாட்க்கு உங்கள் குடும்பத்தோடு குடியேறுகிறீர்கள்.. அங்கு உங்களுக்கு மட்டும் சில விசித்திர சம்பவங்கள் நடக்கிறது.. உங்கள் வீட்டில், தொலைக்காட்சியில் ஒரு புதிய மெகா தொடர் ஆரம்பமாகிறது. அந்த மெகா தொடர் உங்கள் குடும்பத்தை பிரதிபலிக்க, அந்த தொடரின் சம்பவங்கள் உங்கள் வீட்டில் நடக்க ஆரம்பிக்க, இதன் மூலம் என்ன என்று நீங்கள் தேடினால்...... யாவரும் நலம்.

--OOO--
மாதவன் கதையின் எல்லைக்குள் சரியாகவே செய்து இருக்கிறார்.. சண்டைகாட்சிகள் இல்லை. படத்தில் ஒரு பாடல், படம் முடிந்ததும் ஒரு பாடல். பேச்சு வழக்கு நகைச்சுவை, மெலிதாக வசனங்கள் ஊடே. படத்தில் மிக கவர்வது படத்தின் ஒளிப்பதிவு (கலர் டோன்).. பி.சி.ஸ்ரீராம் Rocks.. பின்னணி இசையும், இயக்கமும் குறையில்லாமல் இருந்தது..

--OOO--
ரொம்ப நாட்களுக்கு பின் தமிழில் ஒரு அட்டகாசமான த்ரில்லர்.. நிறைவா பார்க்கலாம்..


My Rating : ****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
08.03.2009

Friday, March 6, 2009

Thank You for Smoking [2005] - புகைபிடித்தல் நலம்!!


பின்நவீன கூறுகளில் ஒன்றான laughter-களில் ஒரு வகை Satire comedy.
--OOO--
நீங்கள் பேச்சாளாராக வேண்டுமா? நேர்காணல்களில் கலக்க வேண்டுமா? குழு விவாதங்களில் அசத்த வேண்டுமா? மார்கெட்டிங், சேல்ஸ் துறைகளில் பணிபுரிபவரா?
--OOO--
புகைபிடித்தல் தீங்கானது என்று எல்லோருக்கும் தெரியும். (கான்செர் மற்றும் ஆண்மை குறைவுக்கு வழிவகுக்கும்) ஆனாலும் பெரும்பாலானோர் புகைபிடித்து கொண்டு இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் உலகம் முழுதும் இறப்போர்களின் சிலரின் இறப்புக்கு காரணம் புகைபிடித்தல். ஆனாலும் எவரும் கண்டுகொள்வதில்லை.
--OOO--
அமெரிக்காவில் Tobacco-வினால் ஏற்படும் விளைவுகளை ஆராய்ச்சி செய்து முடிவுகள் தரும் Academy of Tobacco Studies-இக்கு முதலுதவி செய்வது சிகரெட் கம்பெனிகள். இந்த Academy of Tobacco Studies-இன் Spokesperson-ஆக இருக்கும் நாயகனின் ஒரே வேலை, புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது அல்ல என்று பேசுவது (மேடையிலோ, பேச்சு அரங்கிலோ இன்னும் எங்கெல்லாமோ). நாயகனின் ஒரே பெரும் ஆயுதம் அவன் பேச்சு. தன்னை MOD (Mechant of Death) என்று வர்ணித்து கொள்ளும் நாயகனை பேச்சில் வீழ்த்த எவரும் கிடையாது. தன் சிறு மகனுக்கு ரோல் மாடலாக இருக்கிறான் நாயகன்.

புகைபிடித்தல் முழுதும் தடை செய்யவேண்டும் அல்லது குறைந்த பட்சம் சிகரெட் பாக்கெட்டுகளில் மண்டை ஓடு சின்னத்தை பெரிதாக போட வேண்டும் என்று போராடும் ஒரு செனட்டர். இவர்களுக்கிடையான வாழ்வியல் நிகழ்வுகள் தான் இத்திரைப்படம்.
--OOO--
புகைபிடித்தல் நலம் என்றோ தீங்கானது என்றோ விவாதிக்கும் திரைப்படம் அல்ல. கருத்து சொல்லும் திரைப்படமோ அல்லது நோய்கூறை காட்டும் திரைப்படமோ அல்ல. ஒரு grip-ஆன Satirical Comedy கலந்த ஒரு Drama. இப்படியொரு அட்டகாசமான திரைப்படத்தை பார்த்தல் அரிது. நிச்சயம் பாருங்க. Must see.
--OOO--
வாரயிறுதிகளில் இதுமாதிரியான படங்கள் தரும் அனுபவம் அலாதியானது.


IMDB Link (IMDB Rating 7.9/10)
My Rating : ****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
06.03.2009

Wednesday, March 4, 2009

Snatch. [2000] - Stealing Diamond is Hazardous..


IMDB Rating - 8.2/10 - Top 250: #158

கடந்த பதிவில் கூறியிருந்த படி, இயக்குனர் Guy Ritchie-இன் இந்த திரைப்படத்திலும் நாயகிகளோ அல்லது நல்லவர்களோ கிடையாது.. ஐந்தாறு மாஃபியா கும்பல்கள்.. ஒவ்வொருவரும் ஒரு விதம்.. கொடூரமான ஆட்கள் முதல் காமெடியான ஆட்கள் மற்றும் அமெரிக்கன், பிரிட்டிஷ், ஐரிஷ், ஜியூவிஷ், ஆப்பிரிக்கன், ரஷியன் வரையிலான கும்பல்கள், அவர்களின் ஆங்கில உரையாடல்கள் (accent), அவர்களின் பகடி, என அட்டகாசம்.. ஐரோப்பாவில் வாழ்ந்தால் அல்லது ஐரோப்பிய வரலாறு தெரிந்தால், இயக்குனரின் குறியீடுகள் புரியும் என்று நினைக்கிறேன்.. (எனக்கு அந்த அளவுக்கு புரியவில்லை..)

பெல்ஜியமில் திருடப்படும் 86 கேரட் வைரமொன்று லண்டன் வழியாக நியூயார்க் செல்ல போகிறது அதை திருடிய Benicio del Toro மூலமாக. அந்த வைரத்தை ஆட்டையை போட முயலும் கும்பல்கள் மேலும் இக்கதை Unlicensed Kick Boxing - Promoter Jasan Statham பேச்சு வழி கதையாடல்களாக நகர்த்தப்படுகிறது. Guy Ritchie-இன் Lock, Stock and Two Smoking Barrels [1998] -இல் நடித்த அத்தனை பேரையும் இப்படத்திலும் காணலாம்.. கூடவே Brad Pitt போல் இன்னும் சில பேர்.

வைரம், பாக்சிங், பாக்சிங் பூக்கீஸ், துப்பாக்கிகள், கொலைகள் இவை நிறைந்த நகைச்சுவை குற்ற அட்டகாச திரைப்படம் இந்த Snatch. (சப் டைட்டில் இல்லாமல் இப்படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்.. அல்லது நிச்சயம் வசனங்கள் புரியாது..)

இப்படியெல்லாம் தமிழ் சினிமாவில் யாரவது படம் எடுங்கப்பா..

IMDB Link (IMDB Rating 8.2/10)
My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
04.03.2009

Tuesday, March 3, 2009

Lock, Stock and Two Smoking Barrels [1998] -பணத்திற்கான வேட்டை.


IMDB Rating : 8.1/10 - Top 250: #192

Pulp Fiction புகழ் இயக்குனர் Quentin Tarantino-ஐ நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அமெரிக்காவிற்கு ஒரு Quentin Tarantino என்றால், பிரிட்டனுக்கு ஒரு Guy Ritchie. Guy Ritchie-இன் இரண்டு படங்களை படங்களை பார்த்திருக்கிறேன்.. இந்த படங்களை பற்றி சொல்லவேண்டுமானால் இப்படி சொல்லலாம்.. "யப்பா.. செம அட்டகாசம்.."

இப்படத்தை பொறுத்தவரை, Jason Statham உட்பட நான்கு நண்பர்கள் (திருட்டு பசங்க) தாங்களிடமிருக்கும் பணத்தை வைத்து, ஒரு பெரிய மாஃபியா தல (also a king in porno business) ஒருவனுடன், அவன் கிளப்பில், மூன்று சீட்டு விளையாடி தோற்க்கடிக்கபடுகின்றனர். (மாஃபியா தல ஏமாற்றி ஜெயிக்கிறான்). பந்தய காசான £500,000-ஐ ஒரு வாரத்தில் தராத பட்சத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு விரல் வெட்டப்படும் என்ற நிலையில், £500,000-க்காக என்ன செய்கிறார்கள் என்பது மீதிக்கதை. கஞ்சா விற்கும் இளைஞர்களிடம் இருந்து ஒரு கும்பல் பெரிய அளவு பணத்தை திருட, அதை இந்த நான்கு பேர் திருட மாறி மாறி பணமும் Two Barrels Guns-ம் கைமாறுவதும் படத்தின் மீதிக்கதை. Comedy + Crime இதுதான் plot.

நாயகியோ அல்லது நல்லவர்களோ அல்லது நல்ல வார்த்தைகளோ அல்லது நல்ல கருத்துக்களோ என எதுவும் இல்லாமல், மாஃபியா, குற்றம், கொலைகள் என பிரிட்டனில் இருக்கும் நாலைந்து மாஃபியா கும்பல்களுக்குள் நடக்கும் play-தான் இவரின் திரைப்பட Style.
(சப் டைட்டில் இல்லாமல் இப்படத்தை பார்ப்பதை நிச்சயம் தவிர்க்கவும்..)

Guy Ritchie-இன் இன்னுமொரு திரைப்படம் அடுத்த பதிவில்.

IMDB Link
My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
03.03.2009

Sunday, March 1, 2009

Pulp Fiction [1994] - பின்நவீனத்துவத் திரைப்படம்


IMDB RATING 8.9/10 (Top 250: #5)

மிக வித்தியாசமான அனுபவத்தைத் தர கூடிய திரைப்படமிது.. ஒன்றுக்கொன்று தொடர்புடைய கலைத்து போடப்பட்ட பன்முகத் தன்மை கொண்ட ஏழு தனித்தனிக் கதையாடல்கள், கதையின் தளம் ஒரு மாஃபியா, குற்றம், கொலை, போதைமருந்து, pop கலாச்சாரம் என்றாலும், கதாபாத்திரங்களின் நகைச்சுவை உணர்வு, பகடி செய்தல் என‌‍‍‍‍ ஒரு முழுமையான பின்நவீனத்துவ சினிமா இது. இந்த ஏழு கதையாடல்களுமே, தனித்தனி டைட்டில் கார்டுகளுடன் வரும்.

1. Prologue—The Diner (i)
2. Prelude to "Vincent Vega and Marsellus Wallace's Wife"
3. "Vincent Vega and Marsellus Wallace's Wife"
4. Prelude to "The Gold Watch" (a—flashback, b—present)
5. "The Gold Watch"
6. "The Bonnie Situation"
7. Epilogue—The Diner (ii)

இந்த ஏழு கதைகளையும் வரிசைப்படுத்தினால் 4a, 2, 6, 1, 7, 3, 4b, 5 இப்படியாக வரும். இரண்டு கொலைகாரர்கள், மாஃபியா தலைவன், அவன் மனைவி, ஒரு குத்துச்சண்டை வீரன் மற்றும் ஒரு சிறு திருட்டு செய்யும் காதல் ஜோடிகள் (மேலும் மர்மமான briefcase ஒன்றும், Gold Watch ஒன்றும்)- இவர்களிடையே நகரும் ஒரு non-linear கதை..

Samuel Jackson, John Travolta நடிப்பு அபாரம். Samuel Jackson-இன் வசனங்களும் அவரின் பேச்சின் வீச்சுக்களும் அற்புதம். படத்தின் வசனங்கள் உலகப் புகழ் பெற்றவை (சப் டைட்டில் இல்லாமல் பார்ப்பதை தவிர்க்கவும்). இத்திரைப்படத்திற்க்கென்றுத் தனி ரசிகர் கூட்டமும், ரசிகர் இணைய தளங்களும் உண்டு.

இந்த படத்தைப் பற்றியோ அல்லது படத்தின் கதையையோ எழுத ஆரம்பித்தால், பக்கம் பக்கமாக எழுத வேண்டிவரும். ஒரு மிக சிறப்பான த்ரில்லர், டிராமா, மாஃபியா, பின்நவீனத்துவத் திரைப்படம் என்ற அளவில் முடித்து கொள்கிறேன். நிச்சயம் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் ஒரு மிக சிறந்த சினிமா அனுபவத்திற்காக..

இந்த திரைப்படத்தின் இயக்குனர் Quentin Tarantino-இன் மற்ற மிகச் சிறந்த படைப்புகள்.
Reservoir Dogs (1992) - IMDB Rating 8.4/10 -Top 250: #70
Kill Bill: Vol. 1 (2003) - IMDB Rating 8.2/10 -Top 250: #138
Kill Bill: Vol. 2 (2004) - IMDB Rating 8.0/10 -Top 250: #215
Sin City (2005) (As Special guest Director) - IMDB Rating 8.4/10 - Top 250: #91


Wiki Link மற்றும் IMDB Link

My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
தொடர்புடைய பதிவுகள் : Reservoir Dogs (1992)
01.03.2009

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..