Friday, February 27, 2009

Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb [1964]



IMDB RATING : 8.7/10


படத்தோட பேரே வித்தியாசமா இருக்குல்ல.. படமும் ஒரு வித்தியாசமான படம்தான்.. 1964-இல் வெளிவந்த Black Comedy வகை படமிது.. அரசியலும் போர் சூழலும் படத்தின் தளம்..

அணுகுண்டு தாக்குதலுக்கான கட்டளையை தன் படைகளுக்கு வழங்கக்கூடிய ஒரே அதிகாரம் படைத்த அமெரிக்க அதிபரையும் மீறி அவசர காலத்தில் அந்த முடிவை எடுத்துக்கொள்ளமுடியும் சட்டத்தை பயன்படுத்தி ஒரு ஜெனரல், தன் 34 போர் விமானங்களுக்கு ரஷியாவின் முக்கிய தளங்கள் மீது அணுகுண்டு வீச கட்டளையிடுகிறார். இப்படியான சூழலோடு துவங்குகிறது இந்த கருப்பு வெள்ளை திரைப்படம். அமெரிக்கா - ரஷ்யா இடையிலான பனிப்போர் காலத்தில், தன் விமானங்களை திரும்ப பெற முடியாமல் தன் அதிகாரிகளோடு பென்டகனில் அதிபர் விவாதிக்கிறார்.. Premier of the Soviet Union உடன் தொலைபேசுகிறார்.. படம் முழுமையும் இந்த விவாதங்களோடும், ஒரு போர் விமானத்தில் நிகழும் நிகழ்வுகளை மட்டுமே கொண்ட இத்திரைப்படம், படத்தின் இறுதிகாட்சியில் அந்த அதிகாரிகளின் கூட்டத்தில் இருக்கும் Dr. Strangelove என்பவரின் பேச்சுக்களோடு ("Mein Führer, I can walk!"), ரஷ்யாவில் ஒரு அணுகுண்டு விழுவதோடு முடிகிறது.

ஹிட்லரையும் அமெரிக்க அதிபரையும் ஒப்பிடுவது இன்றைய தேதிக்கும் ஆப்கான், ஈராக் போர் நடத்திய புஷ் வரை பொருந்துவது, இந்த படத்தை இன்றைக்கும் (45 ஆண்டுகள் பின்பும்) ரசிக்க வைக்கிறது. அமெரிக்க ஜெனரலின் கம்யூனிசம் மீதான அந்த வெறுப்பு, அமெரிக்க அதிபர் மற்றும் அதிகாரிகளின் உரையாடல்கள் எல்லாமே அட்டகாசமாக படமாக்கப்பட்டிருக்கிறது. மேலே இருக்கும் இப்படத்தின் போஸ்டரை கொஞ்சம் நல்லா கவனியுங்க.

உலகத்தின் மிக சிறந்த நகைச்சுவை திரைபடங்களில் நிச்சயம் இடம் கொண்ட இந்த கருப்பு நகைச்சுவை திரைப்படம் மிகவும் சிந்திக்கவும் வைக்கும். படம் முழுதுமான போர் பதற்றம் கொஞ்சம் உறையவும் வைக்கும்.

Dr. Strangelove, President Merkin Muffley மற்றும் Group Captain Lionel Mandrake இந்த மூன்று கதாபாத்திரங்களிலும் நடித்தவர் Peter Sellers.


Wiki Link மற்றும் IMDB Link
My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
27.02.2009

Tuesday, February 24, 2009

21 Grams [2003] - மரணத்திற்கு முன்பும் பின்பும்..


கொஞ்சம் உணர்வுகளால் கட்டப்பட்ட ஒரு திரைப்படமிது. Memento- மாதிரியான துண்டாடப்பட்ட கதைகூறல்கள் மூலமாக மூன்று மனிதர்களின் இறந்தகால, நிகழ்கால நிகழ்வுகளை சொல்லும்படமிது. ஒரு கார் விபத்தில் ஒரு பெண்ணின் கணவனையும் இரண்டு அழகான பெண் குழைந்தைகளையும் இழந்த பெண், அக்கார் விபத்தை தவறுதலாக செய்து விடும் முன்னாள் கிரிமினலாகிய Benicio del Toro மற்றும் அக்கணவனின் இதயத்தை பெற்று இதயமாற்று அறுவை சிகிச்சையில் கொஞ்சம் பிழைத்து கொள்ளும் Sean Penn (ஆஸ்கர் நாயகன்). இப்படியாக தம்மை சாராத அல்லது சார்ந்த ஒரு மரணத்திற்கு பின்பான ஒரு நூலில் இணைக்கப்படும் மூன்று மனிதர்களின் வாழ்வியல் நிகழ்வுகள் கதைக்குள் கதையாக சொல்லபடுகிறது.

இப்படத்தின் பின்னணி இசை பற்றி குறிப்பிடாமல் போக கூடாது. வெகு அருமை. படத்தின் இறுதி காட்சிகளில் பின்னணி குரல் மூலமாக சொல்லப்படும் வார்த்தைகள் வாழ்வின் மீதான அக்கறையை புதுப்பித்து செல்கிறது.
உங்களால் துண்டாடப்பட்ட கதைகூறல், மெதுவான வேகம் கொண்ட, உணர்வுகளால் ஆன ஒரு திரைப்படத்தை இரண்டு மணி நேரம் அமர்ந்து பார்க்கமுடியுமென்றால் நிச்சயம் இத்திரைப்படத்தை பாருங்கள்.

டிஸ்கி : இத்திரைப்படத்தை தழுவியே சர்வம் படம் எடுக்கப்பட்டிருப்பதாக ஒரு உறுதிப்படுத்தபடாத தகவல் ஒன்று உலாவுகிறது.


IMDB Link
My Rating : ****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
24.02.2009

Monday, February 23, 2009

81 st OSCARS- FULL LIST- வாழ்த்துக்கள் ரஹ்மான்..



வாழ்த்துக்கள் ரஹ்மான்..



Academy Awards, USA: 2009

Just Announced...
Best Motion Picture of the Year

Best Performance by an Actor in a Leading Role
Winner: Sean Penn for Milk (2008/I)
Best Performance by an Actress in a Leading Role
Winner: Kate Winslet for The Reader (2008)
Best Achievement in Directing
Winner: Danny Boyle for Slumdog Millionaire (2008)
Best Foreign Language Film of the Year
Winner: Okuribito (2008)(Japan)
Best Achievement in Music Written for Motion Pictures, Original Song
Best Achievement in Music Written for Motion Pictures, Original Score
Best Achievement in Editing
Best Achievement in Sound
Best Achievement in Sound Editing
Winner: The Dark Knight (2008) - Richard King
Best Achievement in Visual Effects
Best Documentary, Short Subjects
Winner: Smile Pinki (2008) - Megan Mylan
Best Documentary, Features
Best Performance by an Actor in a Supporting Role
Winner: Heath Ledger for The Dark Knight (2008)
Best Short Film, Live Action
Best Achievement in Cinematography
Best Achievement in Makeup
Best Achievement in Costume Design
Winner: The Duchess (2008) - Michael O'Connor
Best Achievement in Art Direction
Best Short Film, Animated
Best Animated Feature Film of the Year
Winner: WALL·E (2008) - Andrew Stanton
Best Writing, Screenplay Based on Material Previously Produced or Published
Best Writing, Screenplay Written Directly for the Screen
Winner: Milk (2008/I) - Dustin Lance Black
Best Performance by an Actress in a Supporting Role


வாழ்த்துக்கள் ரஹ்மான்..


மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
23.02.2009

Saturday, February 21, 2009

Bourne Series or Trilogy - அதிரடி ரசிகர்களுக்கு செமத்தியான தீனீ..

The Bourne Identity [2002] (IMDB rating : 7.7)
The Bourne Supremacy [2004] (IMDB rating : 7.6)
The Bourne Ultimatum [2007] (IMDB rating : 8.2)(145/Top imdb 250)

உங்களுக்கு அதிரடி படங்கள் பிடிக்குமா? எனில் ஒரு சேர இந்த மூன்று படங்களையும் பாருங்கள், உங்களுக்கான செமத்தியான தீனீ. மூன்றுமே imdb ரேட்டிங்கில் 7.5-க்கு மேலே. சாதாரணமாக தொடர் படங்களில் முதல் படத்தை பின்பு வரும் படங்கள் விஞ்சுவதே கிடையாது. உதாரணமாக இரண்டாவது படம் சறுக்கும். மூன்றாவது கலக்கும் அல்லது சறுக்கும்.ஆனால் இந்த Trilogy படத்தில், மூன்றுமே தனக்கு முந்தைய படத்தை விஞ்சுகிறது.

புல்லட் காயங்களுடன் கடலில் கிடக்கும் ஒருவனை ஒரு மீனவ படகு காப்பாற்றுகிறது. நினைவு திரும்பியவனுக்கு தான் யாரென்று கூட ஞாபகம் இல்லை. தான் யாரென்று தெரிந்து கொள்ள புறப்படும் ஒருவன் தான் நாயகன் (Matt Damon). Jason Bourne என்றும், இன்னும் பல பெயர்களில் பாஸ்போர்ட்டுகளை கொண்ட, பாரிசில் வசிக்கும் CIA-வின் ஒரு ரகசிய திட்டத்தின் உளவாளி. இவனை கொல்ல முயலும் CIA. CIA-வின் பல ரகசியங்களை தெரிந்து கொள்கிறான்.. CIA-வுக்கு தன் அதிரடிகளாலும் விவேகத்தினாலும் தண்ணி காட்டுகிறான்..

ஒவ்வொரு திட்டத்திற்கும் அதிபரின் அனுமதி வாங்க இரந்து கொண்டிருப்பதாக கருதும் CIA-வின் director-இன் ரகசிய திட்டத்தை, நேர்மையான CIA அதிகாரிக்கு தெரிவித்து தான் யாரென்றும் அறிந்து கொள்கிறான் Jason Bourne.

விறுவிறுப்பான, விவேகமான, ஹீரோயிச அதிரடி படங்களை எடுப்பதாக, எடுத்திருப்பதாக பேட்டிகளில் சிலாகிக்கும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் இந்த மூன்று படங்களை கொஞ்சம் பாருங்க..

My Rating : ****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
21.02.2009

Sunday, February 15, 2009

Johnny English [2003] - comedy guaranteed


உங்களுக்கு Rowan Atkinson-ஐ (Mr.Bean) எவ்ளோ பிடிக்கும்? அப்போ அவ்ளோ என்ஜாய் பண்ண முடியும் இந்த திரைபடத்தை..
பிரிட்டன் உளவு துறை ஏஜெண்ட்டுகளுக்கு தகவல் சேகரித்து தரும் நாயகனுக்கு (Johnny English) தானும் ஒரு ஏஜென்ட் ஆக வேண்டுமென்ற ஆசை. பிரிட்டனின் அனைத்து ஏஜெண்டுகளும் ஒரு விபத்தில் இறக்க, நாயகனுக்கு ஏஜென்ட் ஒன் ஆக வாய்ப்பு கிடைக்கிறது. இவரின் பாதுகாப்பில் இருக்கும்போது திருடப்பட்டுவிடும் பிரிட்டனின் விலைமதிப்பற்ற ஆபரணங்களை (அரச குடும்பத்து கிரீடம் உட்பட) மீண்டும் தேடியாக வேண்டும். பிரிட்டனின் அரசபட்டத்தை கைப்பற்ற துடிக்கும் வில்லனை முறியடிக்கும் நாயகன் சர் பட்டம் பெற்ற ஸ்மார்ட் ஏஜென்ட் ஆகிறார்.

Rowan Atkinson படம்.. So, நிச்சயம் சிரித்து மகிழலாம்.. comedy guaranteed..

IMDB Link
My Rating : ***
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
13.02.2009

Friday, February 13, 2009

Taken [2008] - மிகவும் விறுவிறுப்பான அதிரடி..


தற்போது U.S பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கி கொண்டிருக்கும் படமிது. ஹாலிவுடில் வயதான பிரபல ஹீரோக்களுக்கேன்றே தயாராக இருக்கும் ஒருவரி அதிரடி கதைதான் (டீனேஜ் மகனோ/மகளோ அபாயத்தில் மாட்டிக்கொள்ளும் போது தந்தை போய் காப்பாற்றுதல்) இப்படத்தின் கதையும்.. முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஏஜென்டின் பதினேழு வயது மகள் பாரிஸில் இளம்பெண்களை கடத்தி பாலியல் தொழில் ஈடுபடவைக்கும்/விற்கும் கும்பலால் கடத்தபடுகிறாள்.. தந்தை, அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு தனது உளவுத்துறை அனுபவங்களை வைத்து 96 மணி நேரத்தில் மகளை மீட்டெடுக்கும் படம்.

தன்னை கடத்த போகும் பெரும்பயத்தோடு தன் மகள் தன்னோடு மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்போதே, கடத்தப்படும்போது பதட்டம் இருந்தாலும், முகம் தெரியா எதிரியிடம் நாயகன் பேசும் டயலாக்.
I don't know who you are. I don't know what you want. If you are looking for a ransom, I don't have money. But what I do have are a very particular set of skills. Skills I've acquired over a very long career. Skills that make me a nightmare for people like you. If you let my daughter go now, that'll be the end of it. I will not look for you. I will not pursue you. But if you don't, I will look for you. I will find you... and I will kill you.

விறு விறுவென்று ஒன்றை மணிநேரம் போவதே தெரியாது.. செமையா இருக்கும்.. பக்கா அதிரடி படம்.

IMDB Link
My Rating : ****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
13.02.2009

After the Sunset [2004] - ஜாலியா.. ஸ்டைலா..


Pierce Brosnan (முன்னாள் ஜேம்ஸ் பாண்டு) மற்றும் நாயகியா Salma Hayek நடித்திருக்கும் ஸ்டைலான படமிது.. வைரங்களை மட்டும் நாயகன். உதவி செய்யும் நாயகி. இவன்தான் திருடுகிறான் என்று தெரிந்து பிடிக்க முடியா FBI அதிகாரி. திருடுவதிலிருந்து ரிடயர்ட் ஆகி ஒரு அழகான தீவுக்கு குடிபெயரும் ஜோடி, அங்கு FBI அதிகாரியை சந்திக்க, அவர் இங்கு வந்திருக்கும் ஒரு Cruise-இல் உள்ள வைரத்தை கண்காணிக்க வந்து இருப்பதாக சொல்லி நாயகனின் சபலத்தை தூண்டி, பின் நடக்கும் ஸ்டைலான திருப்பங்கள் மீதி கதை.

நாயகன் நாயகி நெருக்கமான காதல் வழியும் காட்சிகள் படத்தை pleasant-ஆக இருக்க உதவுகிறது..வைரங்களை திருடுதல், நாயகன் நாயகி கெமிஸ்ட்ரி, மிக அழகான தீவு, அங்கு அழகான சூரியன் மறையும் அந்தி என படம் ரசிக்கும் படி இருக்கும்..

ஜாலியான ஸ்டைலான படம். நிறைவா பாக்கலாம்..

IMDB Link
My Rating : ***
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
13.02.2009

முதல் குறிப்பு..

திரைப்படங்களாக பார்த்துகொண்டிருக்கிறேன் இப்போதெல்லாம்.. அதிகமான படங்கள் ஆங்கில அல்லது வேற்று மொழி திரைப்படங்களே.. குறிப்பாக நகைச்சுவை, டிராமா, மர்மங்கள் நிறைந்த படங்கள் என் விருப்பதிற்க்குரியவை.. எழுதும் படங்களையெல்லாம் சின்ன சின்ன குறிப்புகளாக ஒரு டைரி மாதிரி எழுதவே இத்தளம்.. சினிமாவின் மைல்கல் படங்கள் மட்டும் எழுதுவேன் என்று கருதவேண்டாம்.. பார்க்கிற எல்லா படங்களை பற்றியும் எழுதுவேன்..

திரைப்படங்கள் வாங்க அல்லது RapidShare/Torrent-களில் டவுன்லோட் செய்ய போகிறவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்க கூடும் இந்த தளம்.. அதேபோல் நீங்கள் பார்த்து களித்த திரைப்படங்களை பின்னூட்டங்களில் தெரியப்படுத்துங்கள்.. என்னுடைய தேடலுக்கு உதவியாய் இருக்கும்..

உங்கள் மேலான ஆதரவு எப்போதும் போல் தேவை..
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க.. இக்குறிப்பு பலரை சென்றடைய உதவியாய் இருக்கும்..
13.02.2009

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..