Monday, December 28, 2009

தமிழ் படம் - தமிழின் Spoof - பாடல்கள் பார்வை...


கடந்த கிறிஸ்மஸ் நாளில் தமிழ் படத்தின் பாடல்கள் வெளியாகி இருக்கின்றன. பாடல்களை பற்றிய ஒரு பார்வை.

இயக்கம் - C.S.அமுதன்
இசை - கண்ணன்
ஒளிப்பதிவு - நிரவ்ஷா
தயாரிப்பு - தயாநிதி அழகிரி




1. பச்ச மஞ்ச - முகேஷ் மற்றும் chorus

மாஸ் ஹீரோவின் அதிரடி ஒப்பனிங் பாட்டு
சுனாமியின் பினாமியே
குள்ளநரிகளை ஒழிக்கும் நல்ல நரியே
என்று chorus குரலில் துவங்கும் பாடலில் மாஸ் ஹீரோ இவ்வாறாக பாடத்துவங்குகிறார்.
பச்ச மஞ்ச கருப்பு தமிழன் நான்
உலகத்தை ரட்சிக்க கடவுளும் நான்தான்
அட என்ன மிஞ்ச எவனும் இங்க இல்ல
நம்ம தாய் குலத்துக்கு நான்தான் செல்லப்பிள்ள
2011 நம்ம கையில
சந்திப்போம்டா தோழா நாம சட்டசபையில
.
.
எம்.ஜி.ஆரின் "நீங்க நல்லாயிருக்கனும் நாடு முன்னேற" வரிகளை ரீமிக்ஸ் செய்து விட்டிருக்கிறார்கள். :)
.
.
Angelina Jolie ஏங்க வச்ச அழகன்டா
கல்லூரி பெண்களின் கனவு கண்ணன்டா
Oscar எல்லாம் எனக்கு அம்பாசிடர் காருடா
Slumdog கூட எனக்கு சப்ப மேட்டர்டா
மாஸ் ஹீரோக்களே கவனியுங்கப்பா. :)))


2. ஓ மகசியா - ஹரிசரண், ஸ்வேதா மோகன்
ஒரு மிக அழகான டூயட் மெலடி. புல்லாங்குழலோடு துவங்கும் பாடலின் வரிகள் இவை.
ஓ மகசியா ஓ மகசியா
நாக்க மூக்க நாக்க
ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா
புரிந்திருக்குமே. அதேதான். இதுவரை தமிழ் சினிமாவில் தமிழ் அல்லாத/அர்த்தம் இல்லாத வார்த்தைகளை கொண்டு நிறைய பாடல்கள் வந்துவிட்டன. அவற்றை எடுத்து வரிகளாக்கி எழுதப்பட்ட பாடல். டலாக்கு டோல் டப்பிமா, டைலமோ, ஓ மகசிய, பல்லேலக்கா என பாடலின் அத்தனை வார்த்தைகளும் அர்த்தம் இல்லாதவை/தமிழ் அல்லாதவை. ஆனால் மிக அழகான இனிமையான மெலடி. நீங்கள் நிச்சயம்விரும்புவீர்கள்.

3. குத்துவிளக்கு - உஜ்ஜயினி
குத்துவிளக்கு நான் குத்துவிளக்கு
சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு
என்று எள்ளலோடு துவங்கும், உஜ்ஜயினின் போதை குரலில் ஒரு item song. இரண்டு முறைக்கு மேல் நீங்கள் கேட்டால், மிகவும் விரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


4. ஒரு சூறாவளி துவங்கியதே - ஷங்கர் மகாதேவன்
ஷங்கர் மகாதேவனின் உச்ச குரலில் ஒரு பாடல். ரஜினி படங்களில், குறிப்பாக ஒரு பாடல் வரும். ஒரே பாடலில் ரஜினி, வில்லனை விட பணத்திலோ/அதிகாரத்திலோ மிஞ்சி விடுவாரே. அந்த மாதிரியான பாடல் இது. :)

5. படத்தின் தீம் பாடல்;இசை - chorus
'முடியல', 'கடவுளே', 'தாங்கல', 'ஓவரு' என்ற வார்த்தைகளோடு கூடிய தீம் இசையிது.

மொத்தத்தில் தமிழ் சினிமாவின் கிளிஷேக்களை கலாய்ப்பது என்ற முடிவோடு களம் இறங்கி இருக்கின்றனர், தயாநிதி அழகிரி, C.S.அமுதன் குழுவினர்.

டிஸ்கி : இந்த படம், தயாநிதி அழகிரி தயாரிப்பு இல்லையென்றால், இந்த படம் வெளிவருமா? குறைந்தபட்சம் சென்சாரில் கட் விழாமல் வருமா?

டிஸ்கி 2: தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் யாரவது இந்த பதிவை சேர்த்து விட்டுடுங்க..ப்ளீஸ்..


மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
28.12.2009

4 comments:

Saravana Kumar MSK said...

தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் யாரவது இந்த பதிவை சேர்த்து விட்டுடுங்க..

ஆதிமூலகிருஷ்ணன் said...

தமிழிஷ், தமிழ்மணத்துல சேத்துட்டேன்.. ஹையா..!!

கடைக்குட்டி said...

அந்த பச்ச மஞ்ச தமிழன் பாடல் உண்மைலேயே கலக்கல்ங்க...

படத்துல இந்தக் காமெடி ஓவர் டோஸாகி ரசிக்க முடியாம போயிடுமோன்னு நெனைக்கிறேன்.. பார்ப்போம்..

தயாநிதி அழகிரி தவிர வேற யாரும் இந்தச்ப் படத்த எடுத்து வெளியிட முடியாதுன்றது கருத்து சுதந்திரம் மிகுந்த சுதந்திர இந்தியாவின் நிதர்சன உண்மை.. :-)

Saravana Kumar MSK said...

@ஆதிமூலகிருஷ்ணன்: நன்றிங்க்னா.. ஆபிசில் இருந்து இனிமேல் ப்ளாக முடியாது என்றாகிவிட்டது. :)

@கடைக்குட்டி: இல்லங்க. Spoof எவ்ளோ காமெடியா இருந்தாலும் நம்மால் ரசிக்க முடியும். B&C-ல் ஓடுமா என்பதுதான் பிரச்சனை.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..