Wednesday, December 30, 2009

3 Idiots [2009] - அறிவுக்கண்களை குருடாக்கும் இந்தியக் கல்விமுறை..


தான் ஒரு சமூக பொறுப்புடைய நடிகன் என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கும் ஆமீர்கானுக்கு வணக்கம் சொல்லி இந்த படத்தை பற்றி பேச துவங்கலாம்.
.
Chetan Bhagat-ன் Five Point Someone படித்திருக்கீர்களா? அந்த புத்தகத்தின் மூலக்கதை மேல் அல்லது ஒரு வரி கதை மீது, கதை செய்து, திரைக்கதை செய்யப்பட்டிருக்கும் படம்.

.
தன் நண்பனை ஆமீரை தேடி, மாதவனும், ஷர்மானும், இன்னொரு படிப்ஸ் எதிரியும் மேற்கொள்ளும் road trip பயணமொன்றில், மாதவன் தன் நண்பனோடான பொறியியல் கல்லூரி வாழ்க்கையை நினைவுபடுத்திக்கொள்ள துவங்குவதோடு நினைவுகள் விரிகிறது. முதல் நாள் கல்லூரியில் ஜூனியர்களை, சீனியர்களை ரேக்கிங் செய்துக்கொண்டிருக்கையில், ஆமீர் புத்திசாலிதனமாக சீனியரை எதிர்கொள்வதில் இருந்து, ஆமீர், மாதவன், ஷர்மான் நட்புக்காலம் துவங்குகிறது.
.
ஆமீர், மனப்பாடம் செய்து வாந்தியெடுக்கும் இந்திய கல்விமுறையை விரும்பாதவன், சரியான பயிற்சியும், ஆய்வுமுறைக்கு வழிவகுக்கும் நற்கல்வி முறையை விரும்பும் ஒருவன், அதேசமயம் புத்திசாலியும் கூட. மாதவனோ, ஒரு Wild Life Photographer ஆக விரும்பி, ஆனால் நடுத்தர குடும்ப, பெற்றோரின் ஆசைக்காக பொறியியல் படிக்கும் மாணவன். ஏழைக்குடும்பத்து ஷர்மானுக்கு, பொறியியல் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தை முன்னேற்றும் கடமை. இவர்களின் லூட்டிகள், ஆசிரியர்களூடான பிணக்குகள், Virus ஆசிரியரின் பெண்ணுடன் (கரீனா) அமீரின் காதல், இவர்களின் எதிர்காலம். இந்தக்கதையை நகைச்சுவையோடும், நெகிழ்ச்சியோடும் எடுத்திருக்கிறார்கள்.
.
சில காட்சிகள் மிகவும் அருமையாகவே இருந்ததன. பல காட்சிகள் கிளிஷேக்களாக இருந்ததன. மூன்று நண்பர்களும் பரிச்சைக்கு தாமதமாக வந்து பின், பரீட்சை கொஞ்சம் முடிந்த பின்னும், கொஞ்சம் நேரம் கேட்டு எழுதி, தேர்வுத்தாளை ஒப்படைக்கும் வேளையில், தேர்வுத்தாளை மறுக்கும் ஆசிரியரிடம், ஆமீர் செய்யும் உத்தி செம புத்திசாலித்தனம். அதே வேளையில் மின்சாரம் அற்ற வேளையில், leb-ல் battery, inverter வைத்து பிரசவம் பார்க்கும் காட்சியும் குழந்தைக்கு all is well சொல்லி மூச்சு வரவைப்பதும் ரொம்ப பழைய காட்சிகள்.
.
புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கும், தொழிற்பயிற்சிக்கும் ஊக்கம் தராமல் மனப்பாடம் செய்து வாந்தியெடுக்கும் முன்னுரிமை தரும் இந்தியக்கல்விமுறை மீதான விமர்சனத்தையும், பெற்றோர் தம் கனவுகளை ஏற்றி பொதிமூட்டை கழுதைகளாய் குழந்தைகளை மாற்றுவதையும் முன்வைக்கிறது இத்திரைப்படம். ஆனால் இந்த message-காக இரண்டரைமணி நேரம் நம்மை உட்காரசொல்வது படத்தின் குறை. மேலும் ஆமீர், மாதவனை கல்லூரி மாணவர்களாக பார்க்க கொஞ்சம் உறுத்தவே செய்கிறது.
.
3 Idiots- படம் பார்க்க விரும்பினால் பாருங்கள். பல இடங்களில் சிரிப்பு நிச்சயம். பல இடங்களில் கொட்டாவி நிச்சயம்.
படம் பார்க்க விருப்பமில்லையென்றால், Chetan Bhagat-ன் Five Point Someone வாங்கி படியுங்கள். மகிழ்ச்சி நிச்சயம்.


My Rating : ***

மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
30.12.2009

8 comments:

D.R.Ashok said...

nice 1

அன்புடன் அருணா said...

இந்த வாரம் பார்க்க வேண்டுமென்றிருக்கிறேன்.நன்றி கருத்துக்கு.

அஷ்வின் நாரயனசாமி said...

Read my post too... when i write it & publish i saw in my updates the same movie...

co-incidence again.. Happy New Year-

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நல்ல விமர்சனம் நண்பா

RaGhaV said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :-)))

Karthik said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்ங்ணா! :)

Karthik said...

header image semaya irukku.. :)

Saravana Kumar MSK said...

@D.R.Ashok : நன்றிங்க..

@அன்புடன் அருணா : நன்றிக்கா.

@அஷ்வின் நாரயனசாமி : :) நன்றி அஷ்வின்.

@கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் : நன்றிங்க.

@RaGhaV : உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றிங்க.

@Karthik : உனக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.
//header image semaya irukku.. :)//
இதில இருந்தே தெரியுது மூணு மாசமா நீ இந்த பக்கமே வரலன்னு.. :)

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..