Tuesday, November 24, 2009

2012 [2009] - கருப்பு அதிபரென்றால் கைவிட்டுவிடும் வெள்ளையினவெறி..


இப்படத்தை வெளியான போதே பார்த்துவிட்டாலும், இப்படத்தை பற்றி எழுத ஏனோ மனம் வரவில்லை. ஹாலிவுட்டின் டெம்ப்ளேட் கதை, பிரம்மாண்ட விஷுவல் எஃபெக்ட்ஸ், உலகத்தின் எல்லா நாடுகளையும் கதைக்குள் இழுத்து, உலகம் முழுதும் அதிரடி வசூலை நிகழ்த்த விரும்பும் சூட்சுமம், என்பதனாலேயே எழுதாமல் விட்டுவிட்டேன். கதை பற்றி உங்களுக்கே இந்நேரம் தெரிந்திருக்கும். பைபிளில் வரும் நோவாக் கதையை தற்காலத்துக்கு ஏற்றபடிஎடுத்திருக்கிறார்கள்.
.

ஒரு இந்திய விஞ்ஞானி அடுத்த சில வருடங்களில் உலகம் அழிய நேரக்கூடும் என்பதனை கண்டுபிடித்து அமெரிக்க கருப்பு நண்பனிடம் சொல்ல, அந்த நண்பர் மூலம் அமெரிக்க மேலிடத்துக்கு தகவல் சேர, உலக தலைவர்கள் (G-8 Countries Leaders மட்டும், மற்ற மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்களும் மக்களும் எதுக்கு வாழனும்??) சேர்ந்து, ஒரு பெரிய தயாரிக்க spaceship முடிவு செய்கிறார்கள். உலகம் முழுதும் இருக்கும் பணக்காரர்களிடமிருந்து பணம் வசூலித்து, (உலகமே அழிவதானாலும் பணக்காரன் மட்டும் வாழ்ந்தால் போதுமே) சீனாவிடம் கொடுத்து (அமெரிக்காவின் ஆசிய நண்பன்?? அப்போ இந்தியா??), 2012-க்குள் spaceship தயாரிக்கிறார்கள், ரகசியமாக. அப்பறம் 2012 வந்து உலகம் அழிய துவங்க, ஒருத்தன் தன் குடும்பத்தை காப்பாற்ற, விஷுவல் எஃபெக்ட்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ்.
.
என்ன ஆனாலும் அமெரிக்கா, தன் அதிபரை காப்பாற்றும். அதிபரின் அதிகாரிகள் அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள விரும்பாவிட்டாலும், ஒரு டூப் அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையில் விட்டுவிட்டு, POTUS அவரை கோழி அமுக்குவது போல் அமுக்கி, காப்பாற்றிவிடும் (உலகத்தின் முதல் குடிமகன் ஆச்சே). ஆனால் இந்த படத்தில், கருப்பு அமெரிக்க அதிபரை, மக்களோடு சாக விரும்பும் அவரின் தியாக உணர்ச்சியை பாராட்டிவிட்டு, அம்போவென சாக விட்டுவிடுகின்றனர். (Independence Day -வில் அமெரிக்க அதிபர் தான் ஏலியன் விண்களத்தையே அழிப்பார்). ஒபாமா அவர்களே, ஜாக்கிரதை.
.
என்ன இருந்தாலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் கூட Day after tomorrow அளவுக்கு இல்லையென்ற மனசுக்கு தோன்றியது. மொத்த கலிபோர்னியாவும் காலிப்பண்ணிடாங்க. பிரம்மாண்ட படம். உலகப் படம். இந்தியாவில் கூட சக்கை போடு போடுகிறதாம். போய் பாருங்க.
.
2012 - மூன்றாம் உலக நாடுகளும், பணக்காரர்கள் அல்லாதவர்களும் உலகத்துக்கு தேவையே இல்லை.
.

IMDB LINK

My Rating : ***

மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
24.11.2009

3 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

இப்பிடி ஒரு பிளாக் வெச்சிருக்கேன்னு இத்தனை நாள் கவனிக்காம போயிட்டேனே கவிஞா.! குட்.!

குமார் said...

வணக்கம் தோழரே,
உங்களது விமர்சனம் படித்தேன். முதலில் 2012 படத்தை விஷுவல் எப்பெக்ட் உட்படுத்தி மட்டும் பார்ப்பதை நிறுத்துங்கள். படத்தில் பணக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கு மட்டும்தான் இந்த உலகம் என்ற சொல்லப்பட்டிருப்பதாக நினைப்பது தவறு. இன்றைய சூழலில் உலகம் எப்படி இயங்குகிறது என்று படத்தில் எடுத்து காட்டி இருக்கிறார்கள். ஒருவேளை இந்தியா அழியும் பட்சத்தில் உங்கள் பிரதமர் உங்களைக் காப்பாற்ற என்ன முயற்சி எடுப்பார்? ஒன்றும் செய்யமாட்டார் அல்லவா? அதைத்தான் படத்தில் காட்டியிருக்கிறார்கள். பொதுவாக ஒரு படத்தில் இயக்குநரின் கருத்து அந்தப் படத்தின் ஹீரோ வாயிலாகதான் வெளிவரும். 2012 படத்தில் இரண்டு ஹீரோக்கள் ஒருவர் அமெரிக்கா கறுப்பு விஞ்ஞானி. மற்றொருவர் தன் குடும்பத்தை காப்பாற்ற நினைக்கும் வெள்ளையர். அவர்கள் கருத்து என்ன?
உலக மக்கள் எல்லாம் சமம். உலக அழிவைச் சாதாரண மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்களின் உயிரைக் காப்பாற்றி கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதுதான். மற்றொரு ஹீரோ எந்த சூழ்நிலையிலும் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். கடைசி வாய்ப்பு உள்ள வரை அதற்காக போராடவேண்டும் என்பதுதான்.2012 படத்தின் விமர்சனத்தை மிகச் சுருக்கமாக இரண்டே வரிகளில் சொல்லிவிடலாம். இந்த உலகம் என்றாவது ஒரு நாள் அழிவது நிச்சயம். அதுவரை எல்லோரும் இனம்,மதம், மொழி பேதம் பார்க்காமல் ஒற்றுமையாக இருக்கவேண்டும். இதை மக்கள் விரும்ப வேண்டும் என்பதற்காக கொஞ்சம் விஷுவல் எப்பெக்ட் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.

Saravana Kumar MSK said...

@ஆதிமூலகிருஷ்ணன் : நான் ரொம்ப நாளா வச்சிருக்கேன் அண்ணா. நீங்க தான் வரவே இல்லை. :) நன்றி.

@ குமார் : நீங்க சொல்ற மாதிரி உலகம் இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஆனால் அப்படி இல்லீங்க உலகம். :) நன்றி.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..