
இந்த திரைப்படம் Jab We Met ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக். நான் ஹிந்தி படத்தை பார்க்கவில்லை.
.
பெரிய தொழிலதிபரின் மகன் பரத், தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு, ஒரு ரயிலில் ஏற, தொணத் தொணவென பேசும் தமன்னாவை பார்க்கிறான். ரயிலில் சில குளறுபடிகளால் ரயிலை கோட்டைவிட்டுவிட்டு செய்துவிட்டு, தமன்னாவை, தேனி மாவட்டத்தில் வீட்டில் சேர்க்க துணிகிறான். தமன்னா, வேறொருவனை காதலிப்பதால், வீட்டில் சந்தானத்துடன் நிச்சயிக்கப்படும் திருமணத்தை விரும்பாமல், தன் காதலனை தேடி ஊட்டி செல்ல, பரத் உதவுகிறான். பின்பு சில நிகழ்வுகள். முடிவு என்ன ஆனது, என்பது மீதிக்கதை.
.
பரத் ஒரு உம்மனாமூஞ்சி. தமன்னா ஒரு லொட லொட. (இருந்தாலும் பொண்ணு அழகு) தமன்னா குடும்பம் லூசு குடும்பம். செம கடுப்பாகும் சமயத்தில் சந்தானம் நம்மை காப்பாற்றுகிறார்.

சந்தானம் இருப்பதால் படம் முழுதும் சிரிக்க முடிகிறது. சந்தானம் (கூடவே சிங்கமுத்துவும் மனோ பாலாவும்) படத்தை விழும்போதெல்லாம் தாங்கி பிடிக்கிறார். சந்தானம் ஒரு சின்ன கவுண்டமணியாக மாற முயற்சிக்கிறார். அது அவருக்கு பொருந்தவும் செய்கிறது.
.
படம் பார்ப்பதற்கு "ஜெயம்" ராஜா ரீமேக்கும் படம் போல் இருக்கிறது. "ஜெயம் கொண்டான்" படத்தை இயக்கிய கண்ணன் இயக்கி இருக்கிறார். அந்த படத்தை போலவே கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு. தேனி பக்கம் நல்ல அழகா இருக்கும் போல. வித்யாசாகர் மீண்டும் சறுக்கல். வசனங்கள் நல்லா இருக்கு.
.
சில இடங்களில் படம் நல்லா இருக்கு. சில இடங்களில் மொக்கையா இருக்கு. ஆனால் படம் முழுதும் திருப்தியா சிரிக்க முடியும். நண்பர்களோடு போனால் செமையா கலாய்த்து சிரிக்க முடியும். குடும்பத்தோடு போனால் ஒரு டீசென்டான படம் பார்க்கலாம். எனவே உங்கள் விருப்பம்.
.
கண்டேன் காதலை - சுமாரான படம். பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் விருப்பம்.
சன் பிக்சர்சுக்கு இன்னொரு வெற்றி படம்..
.
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
31.10.2009




3 comments:
நச்சுன்னு சொல்லி இருக்கீங்க.. ஆனா இந்த சன் பிக்சர்ஸ் படம்னாலே பாக்க புடிக்கலேங்க.. நீங்க பாத்து .. அத விமரசனமாவும் போட்டதற்க்கு நன்றி.. :-)
nach-nu simple vimarasanam... naanum paathen.. perusa eerkala :(
pattellam romba nallave illa.. Vidyasagar sir-ku enachu-nu theriyala...
Sandhanam than kaapathurar...
தல,jab we met பாருங்க.அது சூப்பர் படம்.அந்தப் படத்த பப்படம் ஆக்கிட்டாணுவ தமிழ்ல.அதுல ரெண்டு பேர் நடிப்பும் அய்யோ.இதுல,அய்யய்யோ... :)
Post a Comment