Friday, October 23, 2009

¡Átame! (Spanish) (Tie Me Up! Tie Me Down!) [1990] - காமம்⇔காதல்..



IMDB Rating : 6.9/10
.

காதல், புனிதமானது தெய்வீகமானது என்றெல்லாம் புனிதப்படுத்தாமல்; காதல், ரத்தமும் சதையும் வியர்வையும் மூச்சுக்காற்றும் உடல்களும் முத்தங்களும் காமமும் புணர்ச்சியும் அன்பும் ரௌத்திரமும் சேர்ந்த கலவை என்று பூச்சுகள் இல்லாமல் காதலை பதியும் திரைப்படமிது.
.

புணர்ச்சி இரண்டு உடல்களை பிணைப்பது மட்டுமல்லாமல், அவ்விருவரையும் காதல் கொள்ள செய்கிறது. உடலுறவுதான் பல உணர்வுகளை உறவுகளை தீர்மானிக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் காதலிப்பதாக சொன்னால், அவர்கள் எதிர்பாலினரின் உடலை காதலிப்பதாகவே அர்த்தம். மோகிக்கிறார்கள். காமம் காதல். காமம் இல்லாமல் காதல் இல்லை.
.
படத்தின் இரு முக்கிய பாத்திரங்களும் (நாயகன்-நாயகி), சிக்கலானவை. சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்கள்.
நாயகன்(Antonio Banderas) சிறுவயதிலேயே அனாதையானவன். மனநல காப்பகத்தில் வளர்ந்தவன். எந்த விதமான பூட்டுகளையும் திறக்கக்கூடியவன். அடிக்கடி மனநல காப்பகத்தில் இருந்து தப்பி வெளியேறி, வெளி உலகத்தை பார்த்துவிட்டு மீண்டும் மனநல காப்பகத்துக்கு திரும்பி வருபவன். மனநல காப்பகத்தை நடத்தும் முதிர்ந்த பெண்மணியுடன், அவள் ஆசையின் பெயரில் உடலுறவு வைத்திருப்பவன். (இந்த தகவல்களெல்லாம் படத்தின் sub-text ஆக வரும். காட்சிகளாக வராது)
போலவே நாயகியும். நாயகி முன்னாள் porn star. போதைப்பொருள் அடிமை. ஒரு வயதான புகழ்பெற்ற இயக்குனரால் இப்போது நடிகை. சுய புணர்ச்சி செய்து கொள்பவள். கடினமான வாழ்க்கை அவளுடையதும்.
.
ஒருவருடம் முன்பு, காப்பகத்தில் இருந்து தப்பித்து வெளியேறிய சமயத்தில்,
நாயகியை ஒரு கிளப்பில் பார்த்து அவளோடு உடலுறவும் கொண்டுவிட்ட அவனுக்கு அவள் மேல் காதல் பிறக்கிறது. ஒரு வருடம் பின்பு, மனநலம் தேறியவனாய், அங்கிருந்து முறைப்படி வெளியேறி, நாயகியை (இப்போது நடிகை) கண்டுபிடித்து, அவளை கடத்தி, அவள் வீட்டிலேயே அவளை கட்டிப்போட்டு காதலிக்க சொல்கிறான். திருமணம் செய்துகொள்ள சொல்கிறான். அவள் மறுக்கிறாள். அவளை காதலிக்க வைப்பதாக சவால். பின்பு அடுத்த இரண்டு நாட்கள். மூர்க்கமான அணுகுமுறை. ரத்தம். புணர்ச்சி. அழுகை. வெளியே செல்லும்போதெல்லாம் எப்போதும் அவளை கட்டிப்போட்டே வைத்திருக்கும் நாயகன். (சைக்கலாஜிக்கலி, கடத்தப்பட்டவர், கடத்தியவரை நேசிக்க துவங்குவர். கடத்தியவனின் ஹீரோயிசத்தை, கடத்தப்பட்டவர் பேச துவங்குவார்.) இவர்களின் புரிதல் காதல் காமம், இவைகளுக்கிடையே காதல் பிறந்ததா?; இத்திரைப்படம்.
.
இவர்களின் குணாதிசியம், வன்முறை மீதான ஈர்ப்பு எதிர்வினை, காமத்தின் தகிப்பு, உடலுறவின் அவள் விரும்பும் ஆதிக்கம், மேலும் படத்தில் வரும் இயக்குனர் அவரின் மனைவி, நாயகியின் அக்கா போன்றோர்களின் கதாபாத்திரங்களும் படத்தின் சிறப்பு.
.
இப்படத்தின் இயக்குனர் Pedro Almodóvar; புகழ் பெற்ற, வெற்றிகரமான, controversial ஸ்பானிஷ் இயக்குனர்.
(Melo Drama, சிக்கலான அணுகுமுறை, நகைச்சுவை, உணர்ச்சிகள், ஆசை, ஈர்ப்பு, வன்முறை, அதிரவைக்கும் வண்ணங்கள், கதாபாத்திரங்கள் இவரது ஸ்பெஷலிட்டி.)

கீழ்க்காணும் படங்களெல்லாம் இவரின் சில புகழ்பெற்ற படங்கள்.
Mujeres al borde de un ataque de nervios (aka. Women on the Verge of a Nervous Breakdown) [1988]
Todo sobre mi madre (aka. All About My Mother) [1999]
Hable con ella (aka. Talk to Her) [2002]
Volver [2006]
.
¡Átame! - A Love Story... with Strings Attached!
ஒருவிதமான அழுத்தமான கவித்துவமான உளவியல் வன்முறை மீதான ஈர்ப்பு.
.


IMDB LINK

My Rating : ****

மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
23.10.2009


இன்று SAW-6 வெளியாகிறது. SAW-5 மாதிரி மோசமாக இல்லாம நல்லா இருக்கணும்.

6 comments:

butterfly Surya said...

நன்றி சரவணகுமார். பெட்ரோ என் மனம் கவர்ந்த இயக்குநர்களில் ஒருவர்.

அவரின் படைப்புகள் பற்றிய எனது பதிவு

http://butterflysurya.blogspot.com/2009/03/pedro-almodovar.html

Saravana Kumar MSK said...

@butterfly Surya : பகிர்வுக்கு நன்றிங்க சூர்யா.. :)
ரொம்ப நாளா இந்த பக்கமே காணோம்??

Cable Sankar said...

சரவணன் உங்க நம்பர் முடிந்தால் அனுப்புங்க.. பேச்ணும் உங்க கூட..

jackiesekar said...

நேத்து ஒரு பின்னுட்டம் போட்டேன்... அதை என் நீங்க போடலை... அல்லது கிடைக்லையா?

இந்த படத்து இயக்குனருடைய வோல்வர் பார்த்து இருக்கேன்... அந்ம படம் சென்னை உலக படவிழாவுல முதல் படமா திரையிட்டாங்க....

பதிவுக்கு நன்றி
அன்புடன்
ஜாக்கி

ஹாலிவுட் பாலா said...

இந்த ஒரெயொரு படம் மட்டும்தான்.. இவரோட இயக்கத்தில் பார்த்திருக்கேன் சரவணன்!

இதோட தமிழ் வெர்ஷன் ‘குணா’-ன்னு சொல்லலாமா?

கார்த்திக் said...

//இதோட தமிழ் வெர்ஷன் ‘குணா’-ன்னு சொல்லலாமா?//

தல காதல் கொண்டேன்,மாயாவி...
இதுவும் கூட இந்த வகையாரா தான்
நான் இவர் இயக்கத்துல Talk to her மட்டும் தான் பாத்திருக்கேன்

நல்ல விமர்சனம் MSK

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..