
சத்யம் சினிமாஸ் தயாரித்து வந்திருக்கும் படம் திரு திரு துறு துறு.. இளைஞர்களை மட்டுமில்லாமல், சிரிக்க தெரிந்த எல்லாரையும் குறிவைத்து படம் எடுத்திருக்கிறார்கள்.
.
இவ்ளோ Leight Weighted படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. கடைசியா தமிழ்ல அப்படி பார்த்த படம் பொய் சொல்ல போறோம். குட்டி குட்டியா ஜாலியா மென்மையா ஒரு படம் இந்த திரு திரு துறு துறு.. ரெட் ஒன் கேமராவில் டிஜிட்டல் ஒளிப்பதிவில் வந்திருக்கும் படம்.
.
அஜ்மலும் ரூபாவும், மௌலியின் விளம்பர கம்பெனியில் வேலை பார்க்கும் இருவர். மௌலியின் மகன் போன்றவர் அஜ்மல். முதலில் என்னவோ அஜ்மலுக்கும் ரூபாவுக்கும் 'ஈகோ; மோதல்; பின், காதல்' போன்ற கதையா இருக்கும் என்று நினைத்தால், நல்ல வேளையாக அப்படி இல்லை. இவர்களின் விளம்பரத்தில் நடிக்க ஒரு குழந்தை தேவைப்பட, ஒரு முகவரி இல்லாத குழந்தை ஒன்று, இவர்களை கையில் சிக்க, விளம்பர படம் எடுத்தாயிற்று. ஆனால் Client-இடம் பெற்றோரிடமிருந்து No Objection Certificate கொடுத்தாக வேண்டும். ஆனால் குழந்தையின் பெற்றோர்?
.
ஓபனிங் சாங், ஹீரோ இன்ட்ரோ, பன்ச் டயலாக், ஹீரோயின், வில்லன், குத்து பாட்டு, வெளிநாட்டில் டுயட் பாட்டு, தனி காமெடி ட்ராக், சண்டை, செண்டிமெண்ட், கிளைமாக்ஸ் என்ற தமிழ் சினிமாவின் விதிகள் இல்லாமல், உண்மையிலே ஒரு கிரேசி மோகன் மேடை நாடகம் மாதிரி, குட்டி குட்டியா அழகழகான குபீர் சிரிப்புகள் படம் முழுதும். ஒரே ரகளைதான் போங்க. மௌலிக்கு எல்லோர் பெயரும் மறந்து போவதாகட்டும், குழந்தையை கண்டுபிடிப்பது முதல், பெற்றோர் கண்டுபிடிப்பது எல்லாம் நல்ல கலாட்டா.
.
அஜ்மலும், ரூபாவும் நல்லாவே பண்ணி இருக்காங்க.(அஜ்மல் கையில் போட்டிருக்கும் அந்த tattoo செமையா இருக்கு). அதிலும் இந்த பெண் ரூபா, செம கலக்கல். க்யூட். அப்பார்ட்மென்டில் இருவரும் குழந்தையோடு பெரும் பாடு.
இந்த ரகளையில் அஜ்மலுக்கும், ரூபாவுக்கும் காதல் மலர்வது படத்தை உறுத்தாமல் இருக்கு. படத்திற்கும் நல்லது. மௌலி, சொல்லவே வேண்டாம், கச்சிதமா நடிச்சிருக்கிறார். அந்த குழந்தையும் (தர்ஷன்) கியூட்.
.
படத்தை இயக்கி இருப்பது நந்தினி என்றொரு புது இயக்குனர். கண்ட நாள் முதல் ப்ரியா மாதிரி இன்னொரு வரவு. நல்ல திரைக்கதை (கொஞ்சம் பிசிறுகள் இருந்த போதிலும்).
.
சுதிரின் ரெட் ஒன் கேமராவும், ஆர்ட் டைரக்டரும் (நல்ல கலருங்க படம் முழுதும்), சூர்யாவின் எடிட்டிங்கும் படத்திற்கு பலம். மணி சர்மாவின் பின்னணி இசை ஓகே, மேலும் பாடல்கள் சுமார் ரகம் மட்டுமில்லாமல், படத்திற்கும் கொஞ்சம் உறுத்தலா இருக்கு.
.
நிச்சயம் சின்ன பட்ஜெட் படம்தான். ஆனாலும் திருப்தியாதான் இருக்கு. ஏன்தான் பெரிய பட்ஜெட்டில் படமெடுத்து படுத்துகிறார்களோ என்ற கேள்வி தேவையில்லாமல் எழுகிறது. எங்கேயும் நம்மள ரொம்பப் படுத்தாம, சிரிக்க வைப்பதற்கே எக்ஸ்ட்ரா பாராட்டுகள், படத்தின் குழுவினர்க்கு.
.
திரு திரு துறு துறு - ரெண்டு மணி நேரம் சிரிச்சிட்டு வர கியாரண்டி..
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
26.09.2009




7 comments:
இந்தப் படத்துக்கான ரேட்டிங்க தேடிட்டு இருக்கேன்.
@Karthik : எங்கே தேடுகிறாய் கார்த்திக்?
நல்ல விமர்சனம்
நல்லதொரு படத்தை பற்றிய நல்ல விமர்சனம், நன்றி.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்
கலகலப்பான ஒரு படம் நீண்ட நாளைக்கு பின்...
நீங்கள் எழுதிய இந்த பதிவில் "பொய் சொல்ல போறோம்..என்ற படத்தை பற்றி சொல்லி இருந்திங்க...பலர் இடம் இதனை நானும் கேட்டதுண்டு....ஏனோ நான் கேட்ட எல்லோரும் படத்தை பற்றி எதொ சொன்னாக...
நீங்க எழுதிய போது எனக்கு மிகவும் சந்தோஷ்ம்....
பதிவிற்க்கு வாழ்த்துகள்..
கச்சிதமான விமர்சனம்.
படத்தை பார்க்க தூண்டுகிறது.
@Cable Sankar : நன்றி தலைவரே..
@வெடிகுண்டு வெங்கட் : நன்றிங்க.
@அஷ்வின் நாரயனசாமி : நன்றி அஷ்வின். பொய் சொல்ல போறோம் எனக்கு பிடிச்சிருந்துது.
@மஞ்சூர் ராசா : நன்றிங்க.
Post a Comment