Thursday, September 17, 2009

உன்னை போல் ஒருவன் - அகம் புறம் - பாடல்கள்

டிஸ்கி : இசையை கேட்க மட்டும்தான் எனக்கு தெரியும். இந்த பதிவு இசை விமர்சனம் அல்ல. கேட்ட பாடல்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு பகிர்வு. இசை அறிமுகம்.



உன்னை போல் ஒருவன்


உன்னை போல் ஒருவனின் பாடல்களை கேட்டிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்து போயிற்று. இதற்கு முன்பும் ஸ்ருதியை சினிமா நிகழ்ச்சி படங்களிலும் அல்லது லக் பட போஸ்டர்களிலும் பார்த்திருந்த போதும், அவ்வளவாக பிடிக்காமல் இருந்த ஸ்ருதி, இப்போது உன்னை போல் ஒருவனின் பாடல்கள் மற்றும் ப்ரோமோ பாடலுக்கு பின்பு, பித்து பிடிக்கும் அளவுக்கு எனக்கு பிடித்திருக்கிறது.

படத்தில் ஐந்து பாடல்கள்.

அல்லா ஜானே - ஸ்ருதியின் குரலில் மற்றும் கமலின் குரலில் இன்னொரு முறையும் இரு பாடல்கள். இரண்டுமே நச். மேலும் இதுவரை நான் அறிந்திடாத கமலின் குரலில் கமல் பாடும் போது செமையா இருக்கு.

நிலை வருமா - பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் கமல். இந்த ஆல்பத்தின் உயிர் பாடல். அவ்ளோ அருமையா இருக்கு. பாம்பே ஜெயஸ்ரீ-யின் குரலில் தொடங்கும் பாடலின் பின்னர் வந்து கமல் சேர்ந்து கொள்கிறார் (விருமாண்டியில் - 'உன்னை விட' பாடல் போல). மிக அருமையா இருக்கு. மனுஷ்ய புத்திரனின் வரிகளும் மிக அருமை.

உன்னை போல் ஒருவன் - படத்தின் தீம் சாங் மாதிரி. "Am the new face of the terror" என்பதற்கான பாடல்.

வானமே இல்லை - இந்த பாடலில் தான் ப்ரோமோ சாங். ஸ்ருதி மற்றும் ப்ளேஸ் பாடும் பாடல். செம செம. அதுவும் இந்த பாடலின் இசை மிக்ஸ் மிக அருமை.

எல்லா பாடல்களிலும் புது ரத்தம் பாய்ச்சியது போல் அருமையான் இசை. ஸ்ருதி Rocks. நிச்சயம் ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமா இசையில் புது நகர்வு.

o0o

அகம் புறம்


"சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நாடோடிகள்" படங்களில் இசையில் கலக்கிய சுந்தர் C பாபு இசையில் வெளிவந்திருக்கும் படம் "அகம் புறம்". ஷாம் மீனாட்சி நடிப்பில் வரும் படம் . ஆல்பத்தில் ஆறு பாடல்கள்.

கண்கள் மோதி - விஜிதா மற்றும் நரேஷ் ஐயர் குரலில் ஒரு அழகான மெலடி. அதிலும் ஒரு விஜிதா குரலில் அழகான ஹம்மிங் நச்.

கண்களை பறித்திடும் - கிட்டத்தட்ட "சித்திரம் பேசுதடி"யின் இடம் பொருள்" மற்றும்
"அஞ்சாதே"வில் வரும் "மனசுக்குள்" பாடலை நினைவு படுத்துகிறது.

கட்டில் மேல் - ரஞ்சித் மற்றும் சயனோரா குரலில் மேலும் ஒரு டூயட் போல. வெஸ்டர்ன் இசை.

ஒரே ஒரு ஊரு - ஷங்கர் மகாதேவன் குரலில் கிராமத்து நினைவுகளை தடம் பிடித்து செல்லும் ஒரு பாடல். நல்லா இருக்கு.

ஒரு மணி ரெண்டு மணி - P.P.வெங்கட் குரலில் இன்னொரு "வாழ மீனுக்கும்", "கத்தாழ கண்ணால", "ஆடுங்கடா" போல, வித்தியாசமான கானா அல்லது குத்து. சுந்தர் C பாபுவுக்கும் மட்டும் எப்படி இப்படி ஒரு பாடல், படத்திற்கொன்றாய் செய்ய முடிகிறதோ? இந்த வருடத்தின் பெரிய ஹிட்டாக வாய்ப்பு இருக்கும் பாடல்.

அகம் புறம் தீம் - சுந்தர் C பாபு கம்போஸ் செய்திருக்கும் ஒரு நல்ல த்ரில்லர் தீம். நல்லா இருக்கு.

வழக்கம் போல் இல்லாமல், கொஞ்சம் சுமாரா, சுந்தர் C பாபு செய்திருக்கும் ஆல்பம். கொஞ்சம் அவருடைய முந்தைய படங்களை நினைவுபடுத்துகிறது சில இடங்களில். படத்தின் தன்மையை பொறுத்து பாடல்களின் வெற்றி அமையலாம்.

o0o

அமீரின் யோகி பட பாடல்களும் நல்லா இருக்கு. அமீர் + யுவன் = கலக்கல் Again.


மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
17.09.2009

4 comments:

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

அஷ்வின் நாரயனசாமி said...

பதிவிற்க்கு நன்றி.... நானும் கேட்டேன் ... என்னை பொறுத்த வரையில் பாடகலுக்கு 70% (உன்னை போல் ஒருவன்)

அகம் புறம் கேட்டு கருத்தை போடுகிறேன்...

Several tips said...

மிகவும் நன்று

Saravana Kumar MSK said...

@தமிழினி : நன்றிங்க தகவலுக்கு.

@அஷ்வின் நாரயனசாமி : அகம் புறம் கேட்டு பாருங்க அஷ்வின்..

@Several tips : நன்றி.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..