Sunday, June 28, 2009

நாடோடிகள் - திரைவிமர்சனம்


நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்..
.

சுப்ரமணியபுரம் வெற்றிக்கு பின், சசிக்குமார் நடித்து சமுத்திரக்கனி இயக்கத்தில் வந்திருக்கும் படம்தான் நாடோடிகள். சுப்ரமணியபுரம் அளவுக்கு இல்லாட்டியும் செமையா இருக்கு. படம் பெயர் போடும்போதே பின்னணியில் "சம்போ சிவ சம்போ" பாடலும் இசையும் சும்மா அதிர வைக்கிறது.
.
கருணாவும் (சசிக்குமார்) அவன் நண்பர்களும், அவர்களது குடும்பமும் வசிப்பது ராஜபாளையத்தில். கருணாவின் பள்ளிகால நண்பன் சரவணன். சரவணன் சொந்த ஊர் கன்னியாகுமரி. சரவணின் காதலி நாமக்கல். சரவணனும், அவன் காதலியும் பெரிய இடத்து பசங்க. வீட்டில் பிரச்சனை பண்ண, சரவணன், கருணாவிடம் சொல்ல, கருணாவும் அவன் நண்பர்களும் பயங்கர பிரச்சனைகளுக்கு நடுவில் திருமணம் செய்துவைக்கின்றனர். இதனால் பெரிய மனிதர்களை பகைத்து கொண்டதனால், இந்த நண்பர்களுக்கு காதல் இழப்பு, மரணம், உடல் ஊனம் என பல. இருந்தாலும் நண்பன் காதலை சேர்த்து விதத்தில் திருப்தி அடைகின்றனர். ஆனால் திருமணம் செய்து கொண்டவர்களுக்கோ, சில நாட்களில் காதலும் திருமணமும் கசந்து போக, அவரவர் வீட்டுக்கு திரும்பி விடுகின்றனர். விவாகரத்து வாங்க வேலையை துவங்குகின்றனர். கஷ்டப்பட்டு காதலை சேர்த்துவைத்த நண்பர்கள் என்ன கிறுக்கு பசங்களா? காதல் என்ற பெயரில் உடம்பு சுகத்துக்கு அலைபவர்கள் காதலையும் நட்பையும் களங்கபடுத்திவிடுகிறார்களே அவங்களை என்ன செய்யலாம்?
.
உங்கள் நண்பனின் காதல் உண்மையானதாக இருந்தால் உதவி செய்யுங்க. சும்மா டைம் பாஸ் என்றால், ரூம் போட்டு கொடுங்க. கொய்யால.
.
நண்பனின் திருமணம் முடிந்ததும் அவர்களை பஸ் ஏற்றி விடும்போது, கையில் இருக்கும் பணம், கழுத்தில் இருந்த செயின் எல்லாவற்றையும் கழற்றி கொடுக்கும் கருணா. கருணாவின் நண்பனுக்குகாக எதையும் செய்யும் நண்பர்கள். கருணாவின் நண்பன் போலீசில் சிக்கும் போது, மருத்துவ செலவுக்குகாக பணம் கொடுத்து உதவுபவர்கள், காதலை சேர்த்துவைக்க கார், தங்க வீடு என எல்லாரும் மாற்றி மாற்றி உதவி செய்றாங்க. கலக்கல்.
.
கருணாவாக சசிக்குமார் நன்றாக நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல almost அனைத்து கதாபாத்திரங்களும். கருணாவின் முறைப்பெண் இன்னொரு 'சுப்ரமணியபுரம்' சுவாதி. கருணாவின் நண்பர்களாக வரும் இருவரும் செமையா பண்ணி இருக்காங்க. இடைவேளைக்கு முந்தைய அந்த திருமண சேசிங் செம செம. அதிலும் கருணாவின் நண்பர் காதில் அடிவாங்குவது யப்ப்ப்ப்பா. எனக்கு காதில் 'கொய்ங்ங்ங்ங்' என்றது. இடைவேளை முடியும் போது தியேட்டரில் எல்லாருக்குள்ளும் பெரிய அதிர்வுகள். கொஞ்ச நேரத்துக்கு அப்பறம்தான் எல்லாரும் எழுந்து வெளியே போக ஆரம்பிச்சாங்க. கருணாவின் நண்பர்களின் அப்பா, லோக்கல் அரசியல்வாதி, கஞ்சா கருப்பு எல்லாருமே நல்லா பண்ணியிருக்காங்க.
.
ஹீரோ, வில்லன், காதலி, பிரச்சனை, ஹீரோ ஜெயிக்கிறார் என்ற கதைகள் ரொம்ப போரடிக்குது. ஆனா நாலு நண்பர்கள் என்று துவங்கும் படங்கள் நல்லா இருக்கு. சென்னை-28, சுப்ரமணியபுரம், சரோஜா, பசங்க, இப்போது நாடோடிகள்.
.
படத்தின் மிக அருமையான விஷயங்கள், படத்தின் லோகேஷன்ஸ் மற்றும் பின்னணி இசை. இசையமைப்பாளர் 'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' சுந்தர் C பாபு. தமிழ் சினிமாவில் பின்னணி இசை சேர்ப்பை விட, பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாங்க என்பதில் எனக்கு பெரிய வருத்தமுண்டு. ஆனால் சுந்தர் C பாபு, பின்னணி இசை சேர்ப்பில் கலக்குகிறார். நிறைய வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கு. 'சம்போ சிவ சம்போ' அதகளம். மற்ற பாடல்கள் கொஞ்சம் அனாவசியம்.
.
சமுத்திரக்கனி, இப்படியே டாப் கியர போட்டு தூக்குங்க வருங்காலத்தில்.
.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
.
படத்தின் முதல் பாதி - அட்டகாசம்.
இரண்டாம் பாதி - கொஞ்சம் ஸ்லோ. ஆனா நல்லா இருக்கு.
மொத்தத்தில் நாடோடிகள் - நல்ல நண்பர்கள் - கலக்கல்.


மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
28.06.2009

12 comments:

யூர்கன் க்ருகியர்..... said...

thanks for sharing!

King Viswa said...

Nice to know that Good Movies Are Coming Out Now.

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...பார்த்துர வேண்டியதுதான்!!!!

தமிழன்-கறுப்பி... said...

மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க.. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க.. :)

தமிழன்-கறுப்பி... said...
This comment has been removed by the author.
தமிழன்-கறுப்பி... said...

நீ படம் பாக்கறதை விட்டுட்டு பதிவைப்போடு மச்சி, ஓட்டுப்போடுறோம்.
:)

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

நிச்சயம் பார்க்க வேண்டியதுதான் என எண்ண வைக்கிறது உங்கள் பதிவு.

வண்ணத்துபூச்சியார் said...

நல்ல விமர்சனம்.

நன்றி..

கார்த்திக் said...

படம் எங்க ஊரா சுத்தி சுத்தி எடுத்தாங்க அதுக்காகவாது பாக்கனும்

படம் பாத்துட்டு வந்து பதிவு படிசுக்குறேன்.

Saravana Kumar MSK said...

@யூர்கன் க்ருகியர்..... : நன்றி

@King Viswa : இந்த மாதரியான படங்களுக்கு ஆதரவு கொடுத்தால், எல்லாரும் நல்ல படம் எடுக்க முன்வருவர். :)

@அன்புடன் அருணா : நிச்சயம் பாருங்க அக்கா.

@தமிழன்-கறுப்பி... : கவிதை எழுதனும்.. ஆனா எதுவும் எழுத முடியல. :(

@டொக்டர்.எம்.கே.முருகானந்தன் : நன்றிங்க.

@வண்ணத்துபூச்சியார் : நன்றி.

@கார்த்திக் : நிச்சயம் பாருங்க. நன்றி.

ஸாவரியா said...

அப்போ பாத்திர வேண்டியது தான் :-)) நல்ல விமர்சனம்

சினேகிதி
ஸாவரியா

அஷ்வின் நாரயனசாமி said...

சரணவன் பதிவிர்க்கு நன்றிகள்...நேற்று தான் இந்த படம் பார்த்தேன்...நீங்கள் சொன்னது மாதிறி இப்படம் கலக்கல்....அடுத்த பதிவு எப்போது...?

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..