Thursday, May 21, 2009

The Truman Show [1998] - உலகம் ஒரு நாடக மேடை..


IMDB Rating : 7.9/10
.
உலகம் ஒரு நாடக மேடை; நாமெல்லாரும் நடிகர்கள்.
மேலிருக்கும் வாசகம் உண்மையாகவே இருந்தால் அது The Truman Show.
.
எனக்கு தனிப்பட்ட முறையிலும் மிகவும் பிடித்த நடிகர் Jim Carrey. இந்தத் திரைப்படம் ஒரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் அல்ல. இத்திரைப்படத்தில் அவ்வளவு கச்சிதமாக நடித்து இருக்கிறார் Jim Carrey. இத்திரைப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியையும், சிறந்த விமர்சனங்களையும் பெற்றத் திரைப்படம். மேலும் Existentialism மற்றும் Simulated Reality-உடன் இத்திரைப்படத்தை அணுகலாம்.
.
Truman, ஒரு சிறு தீவு நகரத்தில் பிறந்து, வளர்ந்து, (சிறு வயதிலேயே ஒருக் கடல் விபத்தில் தன் தந்தையை இழந்து,) படித்து, வேலையில் சேர்ந்து, ஒரு பெண்ணைக் காதலித்து, இன்னொருத்தியை மணந்து, மாலை வேளைகளில் தன் பால்ய நண்பனோடு பீர் அருந்திய படி பொழுதைக் கழித்து, ஒரு சாதரணமான நேர்க்கோட்டு வாழ்க்கையை (An ordinary routine life) வாழ்கிறான், நம்மில் பலரை போலவே.

தன் வாழ்க்கை ஏதோ ஒரு வட்டதுக்குள் இருப்பதாக தோன்றுகிறது. தன் வாழ்க்கை போரடிக்க துவங்க, உலகை சுற்றி பார்க்க விரும்புகிறான். குறிப்பாக தன் முந்தையக் காதலி சென்றுவிட்ட fiji-க்கு செல்ல விரும்புகிறான். ஆனால் அவனால் எங்கும் செல்ல இயலவில்லை. எங்கும் தடங்கல்கள்.
.
ஏன் அவனுக்கு இப்படி நடக்கிறது. ஏனென்றால் அவன் ஒரு 24x7 uninterrupted unedited live telecast show "Truman Show"-வின் நடிகன் என்பதே தெரியாமல் நடித்துக் கொண்டிருப்பவன். Truman-இன் எல்லா நிகழ்வுகளும், பற்பலக் கேமராக்கள் மூலம், 24x7 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி. உலகத்தின் அநேகர்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி. உலகத்தில் பெரிய வருமானம் கொண்ட நிகழ்ச்சி.

அந்த நிகழ்ச்சியை வடிவமைத்தவர்கள், அவனை பிறந்தது முதலே தத்தெடுத்து, ஒரு செயற்கைத் தீவையே வடிவமைத்து, அங்கு அவனை வளர்க்கிறார்கள். அவனைத் தவிர்த்து எல்லாமே அங்கு செயற்கை. அவன் தாய், தந்தை, மனைவி, நண்பன், அக்கம் பக்கத்தினர், அவன் ஊர்க் காரர்கள், அந்தத் தீவு, அந்தக்கடல், நிலா, சூரியன், காற்று என நடிகர்கள். எல்லாமே வடிவமைக்கப்பட்டவை.
.
இப்படி தன் வாழ்க்கையே ஒரு நாடகம் என்றால், தன் வாழ்க்கை ஒரு செயற்கையான உலகத்தில் என்றால், தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நடிகர்கள் என்றால்....
தன் வாழ்க்கையை அறிந்துக் கொள்ள விரும்பும் Truman, தான் யாரென்பதைக் கண்டுக்கொண்டானா என்பது மீதி திரைப்படம்.
.
உலகம் ஒரு நாடக மேடை; நாமெல்லாரும் நடிகர்கள். இது Truman-க்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும். நாமும் அதைத்தான் செய்துக்கொண்டிருக்கிறோம். நாம் யாரோ ஒருவரால் சாவி கொடுக்கப்பட்ட பொம்மையாக இருக்கிறோம். சாவி கொடுப்பதும் நாமேதான் சில சமயங்களில். நாம் பிறரிடம் அன்பு செய்வதாக சொல்கிறோம், பொய் சொல்கிறோம், வெறுக்கிறோம், காழ்ப்புணர்ச்சி கொள்கிறோம், துரோகம் செய்கிறோம், நடிக்கிறோம், முழுமனதோடு. நம்மிடமும் பிறர் அதையே செய்கின்றனர் அவர்களின் முழுமனதோடு.
.
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று நாமும் இங்கு நடித்திருப்போம் ஓஓஓ


IMDB Link

My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
21.05.2009

6 comments:

♫சோம்பேறி♫ said...

நல்ல விமர்சனம் சரவணன்.

க்ளைமேக்ஸில் ஜிம் அந்த படகில் தப்ப முயற்சிக்கும் போது, அவரைத் தொலைக்காட்சியில் நேரலையாகப் பார்க்கும் ரசிகர்களின் ரியாக்ஷனின் சில தியேட்டரிலும் பார்க்கலாம்.

அஷ்வின் நாரயனசாமி said...

சரவணா, என்னை நினைவு கொள்ளுவாய் என நம்புகிறேன்...
நானும் இந்திரைப்படத்தை பார்த்திருக்கிறேன்...அப்போ எனக்கு எந்த பாதிப்பும் எற்ப்படவில்லை...நீங்கள் எழுதி இருக்கும் விமர்சனத்தை படித்த போது எதோ ஒரு பதிப்பு...மீண்டும் காண வேண்டும் போல .... நன்றிகள்....

சரி நான் சமிபத்தில் பார்த்த சில திரைபடங்கள்(உங்கள் வேண்டுகொளுக்கு இணங்க இங்கே பதிக்கிறேன்..) எனக்கு மிகவும் பிடித்தவை...

Before the Rains -2007,
phir milenge -2004,
Namastey London-2007,

மீண்டும் அடுத்த சில திரைபடங்களுடன் உங்களிடம் வருகிறேன்...அஷ்வின்.

King Viswa said...

MSK,

சில படங்கள் அவற்றின் கதை கருவுக்காகவே (Theme) ரசிக்கப் படுபவை. அவற்றில் இந்த படமும் ஒன்று.

இவை எல்லாம் What If என்ற சிந்தனை முறையில் வரும் படங்கள். இவற்றை அடிப்படையாகவே இயக்குனர் ஷங்கர் தன்னுடைய படங்களை அமைத்து இருப்பார்.

What If ஒரே ஒரு நாள் முதல்வரானால்

What If கொள்ளையடித்து படிக்க வைத்தால்

What If சுதந்திர போராட்ட தியாகி மீண்டும் மற்றுமொரு போராட்டத்தை ஆரம்பித்தால்

என்று அவரின் பல படங்களை சொல்லலாம்.

மற்றபடி ரசிக்க வைக்கும் மற்றுமொரு படம் இது.

கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்

King Viswa said...

MSK,

இந்த கமெண்ட்'ஐ இங்கு இடுவதற்கு மன்னிக்கவும்.

நண்பர் அஷ்வின் நாரயனசாமி அவர்களே, உங்களுடைய வலைப் பூவில் கமெண்ட் இடும் ஆப்ஷனில் ஏதோ குளறுபடி நடந்து உள்ளது. நான் பல முறை முயன்றும் இட இயலவில்லை. உங்களின் மெயில் ஐ.டி கூட இல்லாததால் இங்கு கமெண்ட் இடுகிறேன்.

ஆவண செய்வீராக.

கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்

Saravana Kumar MSK said...

@♫சோம்பேறி♫ : வாங்க நண்பரே.. நன்றி.. :)

@அஷ்வின் நாரயனசாமி : நிச்சயம் உங்களை ஞாபகம் இருக்கிறது.. நீங்கள் குறிப்பிட்ட படங்களை குறித்து வைத்துக்கொண்டேன்.. :)

@King Viswa : நன்றிங்க்னா தொடர் ஆதரவுக்கு. உங்களுக்கு பிடித்த சமீபத்தில் பார்த்த படங்களை நீங்கள் குறிப்பிட்டால் நானும் பார்ப்பேன் அல்லவா..??
அஷ்வின் இந்த கமெண்டை பார்ப்பார் என்று நம்புகிறேன்..

கடைக்குட்டி said...

நெஞ்சைத்தொட்ட படம்.. லிங்க் இருந்தா குடுங்க.. மறுக்கா பாக்கனும் போல இருக்கு..

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..