Wednesday, April 29, 2009

Old Boy [2003] (Korean) - Incest is Sin/Taboo?



IMDB Rating : 8.3/10 :: (Top 250: #118)

2004 Cannes Film Festival -இல் Grand Prix -ஐ வென்ற மற்றும் அப்போது President of the Jury ஆக‌ இருந்த director Quentin Tarantino-ஆல் சிறப்பு பாராட்டும் பெற்ற இக்கொரிய திரைப்படம் ஏற்படுத்திய தாக்கங்களும் அதிர்வுகளும், உச்சம்.

இத்திரைப்படம், நான் பார்த்த முதல் கொரியத் திரைப்படம். இத்திரைப்படத்தின் பின்னணி இசை இன்னும் மனதுக்குள் கிடந்து சுழல்கிறது.

Oh Dae-Su கடத்தப்பட்டு, ஒரு அறைக்குள் சிறைவைக்கப்படுகிறான். ஏன், எதற்கு என்று எதுவும் சொல்லப்படாமலேயே. அறைக்குள் படுக்கை முதல் தொலைக்காட்சி வரை இருக்கிறது. உணவு ஒரு சிறு நுழைவு வழியாக வரும். தூங்க வைக்கவும், சிகை திருத்த உதவியாகவும் அறைக்குள் மயக்கப் புகை செலுத்தப்படும். தொலைக்காட்சி செய்திகளில் தன் மனைவி கொல்லப்பட்டதையும் தன் சிறு வயது மகள் கடத்தப்பட்டதையும் தெரிந்து கொள்கிறான். எதுவும் அவனால் செய்ய முடியாத கையறு நிலை. வெளியே வந்து பழிவாங்க ஏதுவாக அறையின் சுவரில் ஒரு மனித உருவத்தை வரைந்து, அதை தாக்கி, பயிற்சியெல்லாம் எடுத்துக்கொள்கிறான். அறைக்குள் சிறைவாசம்; இப்படியாக பதினைந்து வருடங்கள் கழிகிறது.

திடீரென்று ஒரு நாள் விடுவிக்கப்படுகிறான். முதலில் தன் மகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று நினைக்கிறான். ஒரு ஹோட்டலில் சாப்பிட செல்லும்போது, இளம் பெண்ணொருத்தியை சந்திக்கிறான். மையல் கொள்கிறார்கள். அந்த பெண் தன் வீட்டில் தங்க இடம் கொடுக்கிறாள். தன் எதிரியை சந்திக்க நேர்கிறது. எதிரியை கொல்ல முயற்சிக்கும் போது, "என்னை கொன்றுவிட்டால், உன்னை பதினைந்து வருடம் ஏன் சிறைவைத்திருந்தேன் என்பது உனக்கு தெரியாமலே போய்விடும்" என்கிறான். ஐந்து நாட்கள் கால அவகாசம் தரும் அந்த எதிரி, "ஐந்து நாட்களுக்குள் இதற்கான காரணத்தை கண்டுபிடித்தால் நானே தற்கொலைசெய்து கொள்கிறேன் என்றும், ஒருவேளை உன்னால் அந்த காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், இப்போது புதியாய் உன் வாழ்வில் வந்திருக்கும் அந்த இளம்பெண்ணையும் கொலை செய்வேன்" என்றும் சவால் விடுக்கிறான்.

அந்த எதிரி யார், தன் மகள் என்னவானாள், பதினைந்து வருட சிறைவாசத்தின் பின்புலம், இப்போது உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றிப்போன புதுக்காதலியின் உயிர், ஐந்து நாட்கள். என்ன செய்கிறான் Oh Dae-Su? காரணங்களைக் கண்டுபிடிக்க முயல்கையில் ஒரு பிளாஷ்பேக். இந்த பிளாஷ்பேக்கையும் கதையின் முடிவையும் சொல்லிவிட்டால் படத்தின் சுவாரஸ்யம் ஒன்றுமில்லாமல் போய்விடும். ஆகவே படம் பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்படத்தை யார் பார்க்கலாம் : உலகளாவிய சினிமாக்கள் மீது ஆர்வம் கொண்டவர்களும்; புனிதங்களின் மீதான நம்பிக்கையற்றவர்களும்; மனதைரியம் கொண்டவர்களும் மட்டும் பார்க்கலாம்.

இப்படத்தை யார் பார்க்கவேண்டாம் : உச்சக்கட்ட வன்முறைகளும் ரத்தங்களும் கொண்ட படங்களை பார்க்க விரும்பாதோர், புனிதங்களின் மீதான நம்பிக்கை உடையோர், கலாச்சார காவலர்கள், கொஞ்சம் இயல்பான நெகிழ்வான மனம் கொண்டவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நலம்.

இப்படத்தின் பலம், இப்படத்தின் அத்தனைக் கூறுகளுமே. குறிப்பாகக் கதையும், திரைக்கதையும், படத்தொகுப்பும், பின்னணி இசையும், கூடவே இக்கதையை படமாக்க துணிந்த இயக்குனரின் மன தைரியமும். இப்படத்தின் பின்னணி இசை போல், சமீபத்தில் அத்தனை அற்புதமான, அவ்வளவு பொருத்தமான பின்னணி இசையை எத்திரைப்படத்திலும் காண முடியவில்லை. Oh Dae-Su இருபதுக்கும் மேற்பட்ட நபர்களுடன் சண்டையிடும், சினிமாஸ்கோப் போன்றதொரு காட்சியின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும்.. அற்புதம்.

கீழே கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் சில வரிகளை, இப்படத்தை பார்க்காதவர்களும், பார்க்க வேண்டாதவர்களும் mouse-ஆல் select செய்யாதீர்கள்..

இத்திரைப்படம் ஏற்படுத்தி செல்லும் அதிர்வுகளும், கேள்விகளும் சில புனிதங்களை கேள்விக்குள்ளாக்குகிறது. எதிரி, Oh Dae-Su-ஐ பார்த்து சொல்லும் இந்த டயலாக் : "My sister and I loved each other despite everything. Can you two do the same?" பல கேள்விகளை எழுப்புகிறது. உணர்வுகள் புனிதங்களுக்கு அப்பாற்பட்டவையே.

பிற தகவல் : கொரிய மக்கள் பாம்புகள் முதல் இன்ன பிற உயிரினங்களை, உயிருடனோ அல்லது பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடும் பழக்கமுடையவர்கள். இப்படத்தில் Oh Dae-Su ஒரு உயிருடன் இருக்கும் ஆக்டோபசை சாப்பிடுவதாக ஒரு காட்சி வரும். அந்த காட்சி இயல்பாக எடுக்கப்பட்ட காட்சியே.


IMDB Link

My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
29.04.2009

19 comments:

Cable Sankar said...

நல்ல விமர்சனம்

raja said...

i saw this movie long back , it was a exceptional movie about revenge. its the height of vulgarity in revenge. but as u said technically it was a extra ordinary movie.

வண்ணத்துபூச்சியார் said...

பகிர்விற்கு நன்றி நண்பரே. பார்க்க வேண்டும்.

கார்த்திக் said...

இந்தப்படத்த பாத்து ஏண்டா பாத்தோம்னு ஆயிருச்சுங்க.
ஆனா நல்ல சஸ்பென்ஸ் கதை.முடிவுதான் செம கடுப்பு.
ஆனா அருமையானா திரைக்கதை.

Saravana Kumar MSK said...

@Cable Sankar : நன்றிங்க்னா.. அடிக்கடி இந்த பக்கம் வாங்க.

@raja : அதேதாங்க.. உச்சக்கட்ட பழிவாங்கல்.. :)

@வண்ணத்துபூச்சியார் : நிச்சயம் பாருங்க.. பிடிச்சிருந்தா பாராட்டுங்க.. பிடிக்கலைன்னா என்னை திட்டாதீங்க..

@கார்த்திக் : இந்த படம் அந்த மாதிரி.. என்னுடைய நண்பர் ஒருவர் இந்த படத்தை வெகுவாக பாராட்டினார்; இன்னொரு நண்பர் ஒருவர் என்னை செமையாக திட்டினார், இந்த படத்தை பரிந்துரைதற்காக. இந்த மாதிரியான படங்கள் எப்போதுமே எதிரெதிர் விமர்சனங்களை பெறும்..

Anonymous said...

ந‌ல்ல‌ விமர்சனம். சென்ற வருடம் இந்த படத்தை பார்த்தேன். என் தனிப்பட்ட கருத்து அருமையான படம் என்பதே. குறிப்பாக தங்களை போலவே என்னையும் பிண்ணனி இசை பிரமிக்க வைத்தது. நீங்கள் குறிப்பிட்டுள்ள சண்டை காட்சியை மட்டுமே பல முறை திரும்ப திரும்ப பார்த்திருக்கிறேன் இசைக்காக மட்டுமே.இப்படத்தின் இசையை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்.

நல்ல படங்களை நண்பர்களுடன் விவாதிக்கும் நட்பு வட்டம் இருந்த போதும் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த படத்தை பார்க்க சொல்லியிருக்கிறேன். ரொம்பவுமே மன தைரியம் வேண்டும் இந்த படத்தை பார்க்க.

அன்புடன்,
தீபக்

அய்யனார் said...

old boy பார்த்திருக்கேன் சரவணன்..கொறடாவில பல்ல பிடுங்குற காட்சி அப்போ ரொம்ப அதிர்ச்சியா இருந்தது :) பெரும்பாலான கொரிய படங்களில பழி வாங்குதல் சிறப்பா வந்திருக்கும்..

ஹாலிவுட் பாலா said...

ப்ரேம்ஜி.. சொல்லி.. இந்த படத்தை... கொஞ்சம் பார்த்தேன் சரவணன்...! தெரியாத்தனமா.. அழிச்சிட்டேன்.

அப்புறம் பார்க்கலை...! திரும்ப.. டவுன்லோட் பண்ணனும். இந்த டிவிடி.. இங்க கிடைக்கலை!

அதிஷா said...

அருமையான விமர்சனம் பாஸ்

Saravana Kumar MSK said...

@அய்யனார் : அப்படியா தல.. இன்னும் நிறைய கொரிய படங்களை பார்க்கும் விருப்பமிருக்கு.

@தீபக் : உங்களுக்கும் இந்த படம் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி..

@ஹாலிவுட் பாலா : நிச்சயம் பார்த்துடுங்கண்ணா..

@அதிஷா : நன்றிங்க்னா.. முதல் வருகைக்கு.

King Viswa said...

MSK - நல்லதொரு படத்தை பற்றிய விமர்சனம்.Thank You.

என்னை மிகவும் பாதித்த படங்களில் இதுவும் ஒன்று.ஆசியாவின் மிகச் சிறந்த பத்து படங்களில் இது ஏழாவது இடத்தை பிடித்ததாக நியாபகம் - CNN List. அந்த Cannes விழாவில் Palm D'or விருதை வாங்கிய படம் Farenheit 9/11 என்பதால் இந்த படம் பின்னுக்கு தள்ளப் பட்டது, Quentin Tarantino முயற்சி இருந்தும் கூட.

இது The Vengeance Trilogy என்ற பட வரிசையில் முதல் படமாகும். இரண்டாம் படம் இதை விட சிறந்த ஒன்று என்பது என்னுடைய கருத்து. (குறிப்பாக நாயகனின் இருப்பிடத்தில் வில்லனும், வில்லனின் இருப்பிடத்தில் நாயகனும் மற்றவருக்காக காத்திருகும் கட்டம் - வார்த்தைகளால் சொல்ல என்னால் முடியாது: பாருங்கள்). You'll Love it. மூன்றாவது படம் சுமார்தான். இந்தப் படத்தின் முடிவு உங்களை மிகவும் பாதிக்கும். என்னையும் நண்பர்களையும் பாதித்தது. இந்தப் படத்தை எனக்கு Suggest செய்தவர் இயக்குனர் Mysskin ஆவார். அவர் சொன்ன மறு நாளே மூன்று படங்களையும் வாங்கி பார்த்து விட்டேன்.

சில விஷயங்களை இங்கே கூறியே ஆக வேண்டும். Excuse for it.

//Oh Dae-Su இருபதுக்கும் மேற்பட்ட நபர்களுடன் சண்டையிடும், சினிமாஸ்கோப் போன்றதொரு காட்சியின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும்.. அற்புதம்// ஒரே ஷூட்டில் எடுக்கப் பட்ட காட்சி அது.

இந்த படம் மாங்கா என்று அழைக்கப் படும் ஒரு வகை ஜப்பானிய காமிக்ஸ் கதையில் இருந்து தழுவி எடுக்கப் பட்டதாகும். அந்த காமிக்ஸ்'ஐ படிக்க லிங்க் இந்தாருங்கள்: http://rapidshare.com/files/149214505/oldboy.rar.html

மூலக் கதையாகிய இந்த மாங்கா'வை படித்தால் நீங்கள் குறிப்பிடும் அந்த Incest காட்சிகளும், Octopus சாப்பிடும் காட்சிகளும் படத்திற்காக நுழைக்கப் பட்டவை என்பதை உணர்வீர்கள்.வழக்கம் போல ஒரு கதையை எப்போதுமே சினிமாவில் எடுக்கும்போது செய்யும் மாற்றங்களில் இதுவும் ஒன்று.

இந்தப் படம் இந்தியாவில் ஹிந்தி மொழியில் வந்து தோல்வி அடைத்தது. டெக்னிகல் விஷயங்களில் கில்லாடியாக விளங்கும் Sanjay Gupta என்பவரால் இல்லாமல் மாற்றி எடுக்கப்பட்ட படம் (Title = Zinda). நான்கு வருடங்களுக்கு முன்பு வந்தது. முதல் நாள் மூன்றாம் காட்சியை பார்த்து ரசித்தேன். ஆனாலும் படம் ஓட வில்லை.

ஹிந்தி படத்திலும் கூட நம்முடைய கலாச்சாரத்தை மனதில் கொண்டு அந்த "அக்க - தம்பி, அப்பா - மகள்" விஷயங்கள் மாற்றப் பட்டு விட்டன. ஹிந்திப் படம் என்னை ரசிக்க வைத்தது. கொரியா மொழிப் படத்தின் பின்னணி இசையும் OSTயும் மிகவும் அருமையாக இருக்கும். அதைப் போலவே இந்த ஹிந்திப் படத்தின் இசையும் நன்றாக இருக்கும். குறிப்பாக Title Song

ஹாலிவூட்டில் இந்த படத்தை Steven Spielberg இயக்கத்தில் Will Smith நடிக்க இந்த வருடம் / அடுத்த வருடம் வரும் வகையில் ஆங்கில படமாக எடுக்கிறார்கள். ஆனால் அந்தப் படம் மாங்கா காமிக்ஸ்'ஐ தழுவியே இருக்கும். இந்த படத்தை தழுவி இருக்காது. அதனால் அனைத்து வயதினரும் பார்க்கலாம், வன்முறையை தவிர்த்து.

முடிந்தால் காமிக்ஸ்'ஐ படியுங்கள். ரசிப்பீர்கள்.

P.S: படத்திற்கு இரண்டு முடிவுகள் உண்டு. நீங்கள் எந்த Versionஐ பார்த்தீர்கள்?

கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்

Saravana Kumar MSK said...

@கிங் விஸ்வா : நன்றி நண்பரே.. உங்கள் பின்னூட்டம் அருமை. மிகவும் சந்தோஷமாயிருக்கிறது.. The Vengeance Trilogy பார்த்துவிடுகிறேன் மட்டும் இந்த காமிக்கையும் படித்து விடுகிறேன்.. மிக்க நன்றி இந்த தகவலுக்கு..

//ஹாலிவூட்டில் இந்த படத்தை Steven Spielberg இயக்கத்தில் Will Smith நடிக்க இந்த வருடம் / அடுத்த வருடம் வரும் வகையில் ஆங்கில படமாக எடுக்கிறார்கள்.//
இதை நானும் கேள்விபட்டேன்.. ஆனால் இது வதந்தி போலும்..

//P.S: படத்திற்கு இரண்டு முடிவுகள் உண்டு. நீங்கள் எந்த Versionஐ பார்த்தீர்கள்?//
இப்படியொன்று இருக்கிறதா. நான் பார்த்த படத்தில் இறுதியில் வெண்பனி நிலத்தில், தன் நினைவுகளை மறப்பதற்கான மருத்தவ பயிற்சி எடுத்தபின், தன் காதலி மிடோவோடு சேருவதோடு போன்றதான காட்சியில், அவனின் முக மாறுதலோடு படம் முடிந்தது..
இரண்டாவது முடிவு என்ன? தெரிந்தால் சொல்லவும்..

ஹாலிவுட் பாலா said...

//இது The Vengeance Trilogy என்ற பட வரிசையில் முதல் படமாகும். //

இல்லீங்க விஸ்வா...! வரிசையில் இது இரண்டாம் படம். முதல் படம், Sympathy for Mr. Vengeance & மூன்றாம் படம் Lady Vengeance. சரிதானே?

Anonymous said...

pls pls nver support this type of movies. pls undetsand me. my friend who is important and desabled for life time said he was torched by SL army and paramilitarys using the movie Hostal. I dotn know how to expain. but these type of movies will make ppl and small boys crazy. Quintin tarinto is rally mad i feel. Kill bill is ok. but other movies are really bad. pls never ever support. I personnaly it makes ppl crazy. try to understand me. sex is ok. but horrbile ways used is really bad

தமிழன்-கறுப்பி... said...

கொரியாவுல புனிதங்களை கட்டுடைத்தல் சகஜமப்பா ;)
ஆனா வன்முறை என்பது என்னைப்பொறுத்த வரையில் கொஞ்சம் இயல்பு மாறுகிற விசயம்தான்..

King Viswa said...

ஹாலிவுட் பாலா,

//இது The Vengeance Trilogy என்ற பட வரிசையில் முதல் படமாகும். //

இல்லீங்க விஸ்வா...! வரிசையில் இது இரண்டாம் படம். முதல் படம், Sympathy for Mr. Vengeance & மூன்றாம் படம் Lady Vengeance. சரிதானே?//

சரிதான் தல. அவசரத்துல தப்பா கமெண்ட் போட்டு விட்டேன். அந்த மூணாவது படம் சுமார் தான்.

King Viswa said...

MSK,


//இரண்டாவது முடிவு என்ன? தெரிந்தால் சொல்லவும்//

என்ன பிரச்சினை என்றால், அந்த தகவலை எனக்கு சொன்ன அந்த நம்பிக்கை துரோகி இன்னும் எனக்கு அந்த கலெக்டர்ஸ் எடிஷன் ஸ்பெஷல் டீ.வி.டி செட்'ஐ தர வில்லை. அவனை விரைவில் பார்த்து வாங்கி விடுகிறேன்.

Nagappan said...

இந்த படத்த உல்டா பண்ணி 2006ல ஹிந்தி-ல சஞ்சய் தத்த வச்சு "ஜிந்தா" னு ஒரு படம் எடுத்திருக்காங்க... நா முதல்ல அந்த படத்த பாத்து அசந்து போய்டேன்;
போன வாரம் தான் கொரிய படம் பாத்தேன்.
நல்ல விமர்சனம். கிழக்காசிய படங்களில் என்னுடைய லிஸ்ட் இங்கே ......
பெரும்பாலும் ஜப்பானிய படங்கள்:
- ரஷமோன் (1950)
- வாடெர் பாய்ஸ்(2001)
- ஒகிருபிடோ(2008)
- சால் வி டான்சு(1996)
பாத்துட்டு விமர்சனம் பண்ணுங்க!

ILLUMINATI said...

நண்பா!இந்தப் படம் என்னைப் பொறுத்த வரை ultimate vengeance படம்.அது மட்டுமல்லாது,சமூகத்தின் கோட்பாடுகளையும்,சமூகத்தின் கண்ணோட்டத்தையும் கேள்வி கேட்கிறது இது.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..