
IMDB Rating - 8.2/10 - Top 250: #158
கடந்த பதிவில் கூறியிருந்த படி, இயக்குனர் Guy Ritchie-இன் இந்த திரைப்படத்திலும் நாயகிகளோ அல்லது நல்லவர்களோ கிடையாது.. ஐந்தாறு மாஃபியா கும்பல்கள்.. ஒவ்வொருவரும் ஒரு விதம்.. கொடூரமான ஆட்கள் முதல் காமெடியான ஆட்கள் மற்றும் அமெரிக்கன், பிரிட்டிஷ், ஐரிஷ், ஜியூவிஷ், ஆப்பிரிக்கன், ரஷியன் வரையிலான கும்பல்கள், அவர்களின் ஆங்கில உரையாடல்கள் (accent), அவர்களின் பகடி, என அட்டகாசம்.. ஐரோப்பாவில் வாழ்ந்தால் அல்லது ஐரோப்பிய வரலாறு தெரிந்தால், இயக்குனரின் குறியீடுகள் புரியும் என்று நினைக்கிறேன்.. (எனக்கு அந்த அளவுக்கு புரியவில்லை..)
பெல்ஜியமில் திருடப்படும் 86 கேரட் வைரமொன்று லண்டன் வழியாக நியூயார்க் செல்ல போகிறது அதை திருடிய Benicio del Toro மூலமாக. அந்த வைரத்தை ஆட்டையை போட முயலும் கும்பல்கள் மேலும் இக்கதை Unlicensed Kick Boxing - Promoter Jasan Statham பேச்சு வழி கதையாடல்களாக நகர்த்தப்படுகிறது. Guy Ritchie-இன் Lock, Stock and Two Smoking Barrels [1998] -இல் நடித்த அத்தனை பேரையும் இப்படத்திலும் காணலாம்.. கூடவே Brad Pitt போல் இன்னும் சில பேர்.
வைரம், பாக்சிங், பாக்சிங் பூக்கீஸ், துப்பாக்கிகள், கொலைகள் இவை நிறைந்த நகைச்சுவை குற்ற அட்டகாச திரைப்படம் இந்த Snatch. (சப் டைட்டில் இல்லாமல் இப்படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்.. அல்லது நிச்சயம் வசனங்கள் புரியாது..)
இப்படியெல்லாம் தமிழ் சினிமாவில் யாரவது படம் எடுங்கப்பா..
IMDB Link (IMDB Rating 8.2/10)
My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
04.03.2009




3 comments:
அட்டகாசமான படம்!
அருமையான திரைக்கதை, அற்புதமான வசனங்கள்.
வன்முறை சற்று அதிகம்.
நான் ஐரோப்பாவில் வாழ்ந்ததில்லை, இப்போது வாழ்பவனுமில்லை, இருந்தபோதிலும் இந்த படத்தில் புரியவில்லை என்று எதுவுமில்லை.
இப்படியெல்லாம் தமிழ் சினிமாவில் யாரவது படம் எடுங்கப்பா
Good Joke..
comparing qt with guy ritchie is a joke. You can always see a distinct difference in qt's movies every time, but all guy ritchie's are very similar to his "lock stock and ..."(snatch , revolver and rocknrolla)with only a diffrent backdrop. Guy ritchie is nowhere near QT. No other films except his first film is really commendable.
Post a Comment